- மராஸ்ஸோவின் விலை இப்போது ரூ. 14.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம்
- கியா கேரன்ஸ், மாருதி சுஸுகி XL6 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்
மராஸ்ஸோ எம்பீவி காரின் விலையை மஹிந்திரா நிறுவனம் ரூ. 43,300 வரை உயர்தியது. மராஸ்ஸோ மஹிந்திராவின் வரிசையில் நீண்டகால மாடல்ஸில் ஒன்றாகும், மேலும் இது 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எந்த காஸ்மெட்டிக் அல்லது அம்ச புதுப்பிப்புகளையும் பெறவில்லை.
மராஸ்ஸோவின் புதிய விலை
வேரியண்ட்ஸ் | விலை உயர்வு |
M2 7-சீட்டர் | ரூ. 39,599 |
M2 8- சீட்டர் | ரூ. 39,599 |
M4 ப்ளஸ் 7- சீட்டர் | ரூ. 41,700 |
M4 ப்ளஸ் 8- சீட்டர் | ரூ. 41,698 |
M6 ப்ளஸ் 7- சீட்டர் | ரூ. 43,299 |
M6 ப்ளஸ் 8- சீட்டர் | ரூ. 43,299 |
மராஸ்ஸோ வேரியண்ட்ஸ்
மராஸ்ஸோ மூன்று வேரியண்ட்ஸ் செவன் அல்லது எய்ட் சீட்ஸ் கொண்ட அமைப்பைக் கொண்டிருக்கலாம். இதில் M2, M4 ப்ளஸ் மற்றும் M6 ப்ளஸ் ஆகியவை அடங்கும். டாப்-ஸ்பெக் M6 ப்ளஸ் அதிகபட்சமாக ரூ. 43,299 மற்றும் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் சிஸ்டம், பின்பக்க பயணிகளுக்கான ரூஃபில் பொருத்தப்பட்ட ஏர் கண்டிஷனர் வென்ட்ஸ், 17 இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவற்றுடன் வருகிறது. மராஸ்ஸோ ஜி என்கேப் கிராஷ் டெஸ்டில் ஃபோர் ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
மராஸ்ஸோவின் இன்ஜின்
மராஸ்ஸோ எம்பீவி 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 121bhp மற்றும் 300Nm பீக் டோர்க்கையும் வெளிப்படுத்துகிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மராஸ்ஸோ போட்டியாளர்கள்
மராஸ்ஸோ ஆனது கியா கேரன்ஸ், மாருதி சுஸுகி XL6 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்