- மஹிந்திராவிடம் இந்த ஒரே எம்பீவி மாடல் மட்டுமே விற்பனைக்கு இருந்தது
- 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக வழங்கப்பட்டது
மஹிந்திரா தனது அஃபிஷியல் வெப்சைட்டிலிருந்து குறைந்த விற்பனையான மராஸ்ஸோ மாடலை நீக்கியுள்ளது. நிறுவனம் விற்பனைக்கு வைத்திருந்த ஒரே எம்பீவி மாடல் இதுதான். இது த்ரீ-ரோ வாகனம், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் இப்போது அதன் கார்களின் வரம்பிலிருந்து அதை நீக்கியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது, இது வரை எந்த புதுப்பிப்பும் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
மஹிந்திரா மராஸ்ஸோ ஆரம்ப விலை ரூ .9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), டாப்-ஸ்பெக் வெர்ஷன் ரூ. 13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்பட்டது.
அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5,000 யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது, ஆனால் இந்த மாடல் வாடிக்கையாளர்களிடமிருந்து அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை. இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த மாடலின் வருடாந்திர விற்பனை புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 55 முதல் 60 யூனிட்கள் மட்டுமே இந்த எம்பீவியை விற்பனை செய்துள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், மராஸ்ஸோ மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு அதன் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் விரைவில் வெளியிடப்படலாம் என்று தொடர்ந்து ஊகங்கள் இருந்தன, ஆனால் அதன் பிறகு நிறுவனம் அதன் ஆட்டோமேட்டிக் மாடலை அறிமுகப்படுத்தவில்லை வாடிக்கையாளர்களுக்கு மேனுவல் கியர்பாக்ஸின் விருப்பம் மட்டுமே உள்ளது, ஒருவேளை இதுவும் வாங்குபவர்களை ஈர்க்காததற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
அதேசமயம் மேம்படுத்தப்பட்ட BS6 மராஸ்ஸோவில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது 121bhp மற்றும் 300Nm டோர்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டது. இந்த மாடலை வெப்சைட்டிலிருந்து நீக்கும் போது இதன் விலை ரூ. 14.39 லட்சம் முதல் ரூ. 16.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருந்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்