- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படும்
- இது த்ரீ டோர் வெர்ஷன்னை விட கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கும்
மஹிந்திராவின் ஃபைவ் டோர் தார் சமீப காலமாக பேசப்படுகிறது. இப்போது கார் தயாரிப்பாளர் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவியின் லான்ச் டைம்லைன்யை அறிவித்துள்ளார். மாருதி ஜிம்னிக்கு போட்டியாக இருக்கும் இந்த மாடல் 2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டில் லான்ச் செய்யப்படும்.
டிசைனைப் பொறுத்தவரை, ஃபைவ்-டோர் தார் அதன் த்ரீ-டோர்ரை விட பெரிய வீல்பேஸைக் கொண்டிருக்கும், இது கேபினுக்குள் அதிக இடவசதியை ஏற்படுத்தும். இது தவிர, புதிய ஃப்ரண்ட் ரேடியேட்டர் கிரில், டிஆர்எல்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், பெரிய 19 இன்ச் அலோய் வீல்கள் மற்றும் மூன்றாவது வரிசையில் இரண்டு சீட்ஸை பெறும்.
புதிய ஸ்பை படங்களில், வரவிருக்கும் எஸ்யுவி வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, சிங்கிள்-பேன் சன்ரூஃப், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்னைப் பெறும் என்பதை வெளிப்படுத்துகிறது. ரியர் சென்டரில் ஆர்ம்ரெஸ்ட், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரிக் ஃப்யூல் லிட் ஒபனர் இதில் அடங்கும்.
மஹிந்திரா ஃபைவ்-டோர் தார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களில் கிடைக்கும். இது 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களை உள்ளடக்கியது, அவை முறையே 200bhp மற்றும் 380Nm டோர்க் மற்றும் 172bhp மற்றும் 400Nm டோர்க் ஆகியவற்றை உருவாக்குகின்றன. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் யூனிட் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்