- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் வழங்கப்படும்
- த்ரீ-டோர் தாரிலிருந்து பல அம்சங்கள் வித்தியாசமாக இருக்கும்
அப்படி என்ன புதிதாக இருக்கும்?
மஹிந்திராவின் ஃபைவ்-டோர் தார்க்காக ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மஹிந்திரா இந்த ஸ்பெஷல் ஃபைவ்-டோர் காரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், இந்த காரின் சில படங்கள் வெளியாகியுள்ளன, இதன் மூலம் இந்த காரில் உள்ள அம்சங்களை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். வெளியிடப்பட்ட படங்கள் அதன் ஃப்ரண்ட் மற்றும் சைட் ப்ரோஃபைலைக் காட்டுகின்றன, இது ரெட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.
இதற்கு முன்பே, ஃபைவ்-டோர் தாரின் ஸ்பை ஷாட்ஸ் வெளிவந்தன, இது அதன் தோற்றத்தைப் பற்றி நிறைய யோசனைகளை அளித்தது. ஏற்கனவே எல்இடி லைட்ஸ் மற்றும் சி-வடிவ டிஆர்எல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தவிர, ஃபெண்டரின் சைட்டில் இண்டிகேட்டர்ஸ், ஃபாக் லைட்ஸ் மற்றும் ஆறு ஸ்லாட் கிரில் ஆகியவை வழங்கப்படும், இது த்ரீ-டோர் தாரில் இருந்து வேறுபட்டது.
அதேசமயம், இரண்டாவது படத்தில், லேட்ச் டிசைன் எலிமெண்ட்ஸ், முன்பு போலவே டோர் ஹேண்டல்ஸ் மற்றும் பெரிய விங் மிர்ரர் (தார் எழுதப்பட்டிருக்கும்) ஆகியவற்றைக் காணலாம். இருப்பினும், இந்த வடிவமைப்புகள் அனைத்தும் த்ரீ-டோர் தாரிலிருந்து எடுக்கப்பட்டவை, ஒருவேளை இது தாரின் அடையாளத்தை பராமரிக்க.
இந்த அம்சங்களை நீங்கள் பெறலாம்!
இது தவிர, இந்த ஃபைவ்-டோர் தார் 360 டிகிரி கேமராவைக் கொண்டிருக்கும், அதையும் படங்களில் காணலாம். ரியர் வென்ட்ஸ், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் க்ளஸ்டர், கனெக்டெட் கார் டெக்னாலஜி, லெவல் 2 ஏடாஸ், பவர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் கூடுதல் ஸ்பேஸ்காக இரண்டாவது வரிசையில் ஸ்ப்ளிட்-ஃபோல்டிங்க் போன்ற அம்சங்களும் இதில் காணலாம்.
எந்த காருடன் போட்டியிடும்?
மஹிந்திராவின் இந்த புதிய ஃபைவ்-டோர் தார், த்ரீ-டோர் தார் போன்றது, 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பத்தைக் கொண்டிருக்கும், இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்படும்.
இந்த எஸ்யுவி மஹிந்திராவிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் இது XUV700 மற்றும் ஸ்கார்பியோ என்’க்கு அருகில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், யுஎஸ்பி அடிப்படையில் இரண்டு கார்களுக்கும் கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும். இது தவிர, மஹிந்திராவின் இந்த ஃபைவ்-டோர் தார் ஃபைவ்-டோர் ஃபோர்ஸ் கூர்கா மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மிட்-சைஸ் எஸ்யுவிகளின் இந்த வெர்ஷனுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்