- தற்போதைய மாடலின் இன்ஜினைப் பெறுவதற்கான வாய்புள்ளது
- பெரிய இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் சன்ரூஃப் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மஹிந்திரா இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடலான ஃபைவ்-டோர் தாரின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது. இந்த லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் ஆகஸ்ட் 15, 2024 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். இந்திய வாகன உற்பத்தியாளர் கடந்த காலத்திலும் சுதந்திர தினத்தன்று பல அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்களை செய்தது.
வரவிருக்கும் ஃபைவ்-டோர் தார், தற்போதுள்ள த்ரீ-டோர் வெர்ஷனின் அதே சில்ஹவுட்டைக் கொண்டிருக்கும், எக்ஸ்டென்டெட் வீல்பேஸ் மற்றும் இரண்டு கூடுதல் கதவுகளுடன் இருக்கும். டிசைனைப் பொறுத்தவரை, மாடலின் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் புதிய பம்பர்கள், ஃப்ரண்ட்டில் புதிய கிரில், டிஆர்எல்களுடன் கூடிய வட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி ஃபாக் லேம்ப்ஸ், பின்புறத்தில் பில்லரில் பொருத்தப்பட்ட டோர் ஹேண்டல்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெரிய 19-இன்ச் அலோய் வீல்கள் உள்ளன. கூடுதலாக, இந்த ஃபைவ்-டோர் ஆஃப்-ரோடரில் மின்சாரம் சரிசெய்யக்கூடிய சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஃப்ரண்ட் கேமரா மற்றும் ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்டீரியரைப் பற்றி பேசுகையில், ஃபைவ்-டோர் கொண்ட தாரின் கேபின் தற்போதைய வெர்ஷனை விட பெரியதாக இருக்கும். இது பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டீயரிங் வீல், புதிதாக வடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெறும்.
மஹிந்திராவின் ஃபைவ்-டோர் கொண்ட தார் த்ரீ-டோர் தாரின் இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் இருக்காது. அறிமுகப்படுத்தப்பட்டதும், மஹிந்திரா ஃபைவ்-டோர் கொண்ட தார், மாருதி ஜிம்னி மற்றும் வரவிருக்கும் ஃபைவ்-டோர் கொண்ட ஃபோர்ஸ் குர்காவுடன் லைஃப்ஸ்டைல் ஆஃப்-ரோடர் பிரிவில் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்