- இவிகளின் வெளியீடு XUV.e8 இலிருந்து தொடங்கும்
- BE.05, BE.07 மற்றும் BE.09 ஆகியவற்றிற்கு காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டது
மஹிந்திரா தனது வரவிருக்கும் சில எஸ்யுவிகளுக்கு டிசைன் காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது, இது வரும் மாதங்களில் லான்ச் செய்யப்படலாம். கார் தயாரிப்பாளர் பல எலக்ட்ரிக் எஸ்யுவிகளை அறிமுகப்படுத்தவுள்ளது, அதில் முதலாவது XUV700-அடிப்படையிலான XUV.e8 இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும்.
மஹிந்திரா XUV.e8 க்குப் பிறகு, BE.05 அடுத்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படும். இந்த காரின் டெஸ்ட் மாடல் பல முறை பார்க்கப்பட்டது மற்றும் அதன் தயாரிப்புக்கு தயாராக உள்ள ரெடி வெர்ஷனும் படங்களில் காணப்படுகிறது. BE.05 ரால்-இ என பெயரிடப்பட்ட ஒரு ஆஃப்-ரோடு வெர்ஷனையும் இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தும். இரண்டு கார்களிலும் இரண்டு மின்சார மோட்டார்கள் கொண்ட 60kWh பேட்டரி பேக் இருக்கலாம்.
இதற்குப் பிறகு, BE.07 அக்டோபர் 2026 இல் லான்ச் ஆகலாம், அதே நேரத்தில் BE.09 2027 இல் லான்ச் செய்யப்படலாம். BE.09 ஒரு கூபே எஸ்யுவியாக இருக்கும் மற்றும் மூன்று எலக்ட்ரிக் எஸ்யுவிகளில் முதன்மையானதாக இருக்கும். BE.07 மஹிந்திராவின் BE.05 மற்றும் BE.09 க்கு இடையிலிருக்கும் ஒரு மாடலாக இருக்கும். பெடெண்ட் படங்களில் பிளாக்-ஆஃப் கிரில், சி-வடிவ எல்இடி டிஆர்எல்கள், ஏரோ அலோய் வீல் வடிவமைப்பு மற்றும் ஒரு சன்ரூஃப் போன்ற அம்சங்களை இதில் வெளிப்படுத்துகின்றன. மூன்று எஸ்யுவிகளின் லூக்கும் டிசைனும் ஐசிஇ பதிப்பைப் போலவே இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்