- புதிய எலக்ட்ரிக் எஸ்யுவி கனெக்டெட் 3-ஸ்கிரீன் அமைப்பைப் பெறும்
- புதிய மாடல் இல்லுமினேட்டட் லோகோவுடன் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது
மஹிந்திரா நிறுவனம் தற்போது பல்வேறு எலக்ட்ரிக் மாடல்களை உருவாக்கி வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஒன்றன் பின் ஒன்றாக மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போதைய XU400 மாடலில் உள்ள ஐசிஇ வெர்ஷனின் அதே இன்டீரியர் தீம் தவிர, இந்த ஃபுல் எலக்ட்ரிக் மாடல்களும் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் ஸ்டைலிங்கில் பெரிய மாற்றங்களைப் பெறும்.
இங்கே காணப்பட்ட டாஷ்போர்டு புகைப்படம் XUV.e8 மாடலில் உள்ளது, கூபே வெர்ஷன் XUV700-அடிப்படையிலான இவியாக வருகிறது. புகைப்படத்தில் பார்த்தது போல், எஸ்யுவியின் கேபினின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, இது 3-ஸ்கிரீன் லேஅவுட் செட்டப் உடன் வருகிறது, இந்த செட்டப் நாம் பொதுவாக லக்சுரி கார்களில் மட்டுமே பார்க்கிறோம்.
இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் XUV700ஐப் போலவே இருக்கும். இருப்பினும், கோ-டிரைவருக்கு மல்டிமீடியா டிஸ்ப்ளே மட்டுமே இங்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக, ஸ்டீயரிங் ஒரு புதிய சிகிச்சையைப் பெறும். டாடா மோட்டார்ஸும் தனது புதிய வகை எஸ்யுவிகளில் இதைத்தான் வழங்குகிறது.
எலக்ட்ரிக் மாடலில் ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் வீலின் இருபுறமும் கண்ட்ரோல் பட்டன்களுடன் இல்லுமினேட்டட் மஹிந்திரா லோகோவும் கிடைக்கும். மஹிந்திராவின் புதிய ஃபுல்-எலக்ட்ரிக் அடையாளத்தை குறிக்கும் வகையில் இன்ஃபினிட்டி பட்டர்ஃபிளை 'M' லோகோவைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அம்சங்களில் சென்டர் கன்சோல் மற்றும் XUV700 வெர்ஷனிலிருந்து எடுக்கப்பட்ட எச்விஏசி பேனல் ஆகியவை அடங்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, வரவிருக்கும் மஹிந்திரா XUV.e8 எலக்ட்ரிக் காரில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், மல்டிபிள் டிரைவ் மோட்ஸ், லெவல்-2 ஏடாஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன், மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் வர வாய்ப்புள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
புகைப்பட ஆதாரம்- ரஷ்லேன்