- இது ஏப்ரல் 29, 2024 அன்று லான்ச் ஆனது
- ஒரு மணி நேரத்தில் 50,000 பேர் இதை முன்பதிவு செய்தனர்
மஹிந்திரா XUV 3XO ஐ ஏப்ரல் 29, 2024 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தியது, இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 7.49 லட்சம். நிறுவனம் தனது முன்பதிவுகளை இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மணி நேரத்தில் 50,000 பேர் இந்த எஸ்யுவியை முன்பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். இப்போது, மஹிந்திராவும் தனது டெலிவரியை மே 26 முதல் தொடங்கியுள்ளது, இது ஒரு நாளில் 1,500 பேருக்கு மேல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 9,000 யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மஹிந்திரா சமீபத்தில் கூறியிருந்தது. இருப்பினும், XUV 3XO தொடக்கத்திற்கான முன்பதிவுகளுக்கு முன்பே, அதாவது மே 15, 2024 வரை 10,000க்கும் அதிகமான யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்யுவியை விரைவில் டெலிவரி செய்வது எளிதாகிவிடும். இந்த எஸ்யுவிக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவரி கிடைக்கும் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.
புதிய மஹிந்திரா XUV3XO ஒன்பது வேரியன்ட்ஸ் மற்றும் எட்டு வண்ண விருப்பங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
டாடா பஞ்ச் உடன் போட்டியிடும் இந்த காரில், எல்இடி டெயில்லேம்ப்ஸ், டெயில்கேட்டில் 'XUV 3XO' பேட்ஜ், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரூஃப் ரெயில்ஸ், வாஷருடன் ரியர் வைப்பர், ரியர் டிஃபாகர் மற்றும் பெரிய பம்பர் வரை பரந்த எல்இடி லைட் பார் கொண்டுள்ளது.
XUV 3XO ஆனது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டாஷ்போர்டில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புதிய ஸ்டீயரிங் வீல், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், புதிய டிசைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சென்டர் கன்சோல், ரியர் ஏசி வென்ட்ஸ், லெவல் 2 ஏடாஸ், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 65W டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஃபர்ஸ்ட்-இன்-செக்மென்ட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
அதேசமயம் மஹிந்திரா XUV 3XO கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதிலும் நிறுவனம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. இதில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டீஜிடிஐ டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த என்ஜின்கள் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்