- பொலேரோ நியோவில் சைல்ட் மற்றும் அடல்ட் பாதுகாப்பிற்கு 1 ஸ்டார் மட்டுமே
- ஸ்டாண்டர்டாக இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கிடைக்கும்
மஹிந்திரா பொலேரோ நியோ ஜிஎன்கேபின் பாதுகாப்புக்காக சோதிக்கப்பட்டது மற்றும் இந்த எஸ்யுவி 1 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளது. ஒருபுறம், மஹிந்திராவின் XUV700 மற்றும் ஸ்கார்பியோ- N ஆகியவை இந்த கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில், இந்த சோதனையில் மஹிந்திரா கார் இவ்வளவு மோசமாக செயல்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
மஹிந்திரா பொலேரோ நியோவில் இரண்டு ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர், சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர்ஸ் மற்றும் லோட் லிமிட்டர்ஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முடிவுகளைப் பற்றி பேசுகையில், இந்த எஸ்யுவி அடல்ட் பாதுகாப்பில் 34 இல் 20.26 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும் சைல்ட் பாதுகாப்பிற்காக 49 க்கு 12.71 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
டிரைவரின் மார்பு மற்றும் கால்களை பாதுகாப்பதில் இந்த எஸ்யுவி மிகவும் பலவீனமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பாடி ஷெல், அமைப்பு மற்றும் ஃபுட்வெல் பகுதி மிகவும் நிலையற்றதாக உள்ளது என்பது இதில் தெரியவருகிறது.
பொலேரோ நியோவில் பயணிகளுக்கான சைட் ஏர்பேக்குகள் மற்றும் த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட் உட்பட பல பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இந்த எஸ்யுவியின் மோசமான பாதுகாப்பு ரேட்டிங்க்கு இது ஒரு முக்கிய காரணமாகும். மற்றும் கடைசி ரோ சைட் ஃபேஸிங்க் சீட்ஸ் கிராஷ் டெஸ்ட்டில் மிகவும் மோசமாக செயல்பட்டன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்