அறிமுகம்
மஹிந்திரா நிறுவனம் பொலேரோ நியோ ப்ளஸ் மாடலை இந்தியாவில் சில மாதமாக சோதனை செய்து வருகிறது. பொலேரோ நியோவின் இந்த வெர்ஷன், பலமுறை சோதனையில் எந்த உருமறைப்பும் இல்லாமல் காணப்பட்டது. இது ஒரு புதிய நேம்பிளேட்டை பெறும் என்ற எதிர்பார்க்ப்படுகிறது, ஸ்பேர் வீல் கவர் இன்னும் பொலேரோ பிராண்டிங்கைக் கொண்டிருப்பதால், இது பெரும்பாலும் பொலேரோ நியோ ப்ளஸ் என்று அழைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். வரவிருக்கும் எஸ்யுவியிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அனைத்தும் இங்கே தெரிவிக்கிறோம்.
எக்ஸ்டீரியர்
அப்டேடட் ஃப்ரண்ட் கிரில், ஹாலோஜென் ஹெட்லைட்ஸ் மற்றும் புதிய அலோய் வீல்ஸுடன் மீண்டும் ரிடிசைன் செய்ய வாகனத்தின் பம்பர்ஸில் கார் தயாரிப்பாளர் வேலை செய்துள்ளார். இந்த புதிய எஸ்யுவி ஸ்டாண்டர்ட் நியோவை விட 400மிமீ நீளமாக இருக்கும். இருப்பினும், இது அதே வீல்பேஸைக் கொண்டிருக்கும்.
இன்டீரியர்
மஹிந்திரா பொலேரோ நியோ ப்ளஸ் ஐந்து வேரியண்ட்ஸிலும் இரண்டு சீட்டிங் விருப்பங்களிலும் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் P10 (R) செவன்-சீட்டர், P10 செவன்-சீட்டர், P10 (R), P10 மற்றும் P4 செவன்-சீட்டர் ஆகியவை அடங்கும். இந்த பொலேரோ நியோ ப்ளஸ் ஸ்ட்ரெச்சருடன் கூடிய ஆம்புலன்ஸாகவும் கிடைக்கும். செவன்-சீட்டர் அமைப்புகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் ஃபார்வர்ட்- ஃபேஸிங் பெஞ்ச் சீட்ஸ் இருக்கும், நைன்-சீட்டர் கொண்ட வெர்ஷனில் சைட்-ஃபேஸிங் ரியர் சீட்ஸ் கிடைக்கும்.
அம்சங்கள்
அம்சங்களைப் பொறுத்தவரை, பொலேரோ நியோவுடன் ஒப்பிடுகையில், மஹிந்திரா பொலேரோ நியோ ப்ளஸ் கூடுதல் அம்சங்களுடன் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். பொலேரோ நியோ ஏற்கனவே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் ஓஆர்விஎம்ஸ் மற்றும் பல அம்சங்களை பெறுகிறது. பொலேரோ நியோ ப்ளஸ் ஆனது, சமீபத்திய வெளியீடுகளில் வழக்கமாக இருக்கும்படி, கூடுதல் ஏர்பேக்ஸ் மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜியைப் பெறலாம்.
பவர்ட்ரெயின் விருப்பங்கள்
பொலேரோ நியோ ப்ளஸ் ஆனது 118bhp 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் கூடுதல் சுமையை சமாளிக்கும் வகையில் கிடைக்கும் என்று சமீபத்திய டாக்குமெண்ட்ஸ் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனம் 'எகானமி மோட்'டைப் பெறும் என்றும், அங்கு பவர் உற்பத்தி 94bhp ஆக குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. P4 ஆம்புலன்ஸ் வெர்ஷனின் மொத்த எடை 2,130 கிலோவாக இருக்கும், மற்ற அனைத்து வேரியண்ட்ஸின் எடை 2,390 கிலோவாகும். மேலும், இந்த டீசல் மோட்டார் BS6 ஃபேஸ்-2 கம்ப்ளைன்ட் மற்றும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்