- 75 தனித்துவமான சவுண்ட்ஸில் இயற்றப்படும்
- பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
சமீபத்தில் மஹிந்திரா தென்னாப்பிரிக்காவில் சுதந்திர தினத்தன்று, தார் இவி மற்றும் ஸ்கார்பியோ என் அடிபடையான க்ளோபல் பிக் அப்பை அறிமுகப்படுத்தியது. இதை தவிர வாகனத்தின் உள்ளே அமர்ந்திற்கும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த, பிராண்ட் ஏ.ஆர்.ரஹ்மானிடம் புதிய சவுண்ட்ஸைப் பெறுவதற்காக, மற்றும் ஒலி மூலம் பயணிகளின் அனுபவங்களை வழங்குவதற்காக வலியுறுத்துகிறது.
பாடல்கள் எப்படி உருவாக்கப்பட்டன?
ஏ.ஆர்.ரஹ்மான் காஞ்சிபுரத்தில் உள்ள மஹிந்திராவின் டெஸ்ட் சென்டரில் நேரத்தை செலவிட்டார் மற்றும் இந்த ஒலி அமைப்புகளை உருவாக்க முன்னணி எலக்ட்ரிக் வாகனங்களின் ஒலிக்காட்சிகளை ஆய்வு செய்தார். அதிநவீன தொழில்நுட்பத்தை ஒரு இணக்கமான காரில் அனுபவத்துடன் கலந்து, பயணிகளை ஓட்டும் முறைக்கு ஏற்றவாறு வாகன ஒலிகளை aஉருவாக்குவது அவரது இலக்கானது.
இவிஸ்க்கு 75 தனித்துவமான ஒலிகள்
வரவிருக்கும் மஹிந்திரா இவிஸ்க்காக ரஹ்மான் சுமார் 75 தனித்துவமான ஒலிகளை இயற்றியுள்ளார்.இந்த ஒலிகளில் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிரைவ் ஒலிகள், இன்ஃபோடெயின்மென்ட் குறிப்புகள், சீட்பெல்ட் ரிமைன்டர்ஸ் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்ஸ் போன்ற செயல்பாட்டு சமிக்ஞைகள் மற்றும் அனுபவ மண்டல முறைகள் ஆகியவை அடங்கும்.
ஏ.ஆர்.ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “எங்கள் கூட்டாண்மை வெறும் ஒலிகளை உருவாக்குவதைத் தாண்டியது;அது சம அளவில் ஒரு இந்திய கண்டுபிடிப்பின் சாரத்தை உள்ளடக்கியது.நான் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கருவிகளைப் பயன்படுத்தியிருந்தாலும், முன்னோடியான கண்டுபிடிப்புகளுடன் இந்தியா முன்னணியில் இருப்பதைக் கண்டது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்