- பல புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யுவிகள் வர தயாராக உள்ளன
- XUV700 அடிப்படையிலான எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்
மஹிந்திரா தார் ரோக்ஸ் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, மேலும் அதன் முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் மஹிந்திரா இத்துடன் நிறுத்தப் போவதில்லை. நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களின் முழு சீரிஸ்ஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
மஹிந்திராவின் புதிய BE.05 எலக்ட்ரிக் எஸ்யுவி ப்ரொடக்ஷன்-ரெடி அவதாரத்தில் காணப்பட்டது. இது ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது காணப்பட்டது, இது அதன் லான்ச் விரைவில் இருக்கும் என்பதை குறிக்கிறது.
புதிய மஹிந்திரா BE.05 இன் பெரும்பகுதி அதன் கான்செப்ட் மாடலைப் போலவே வைக்கப்பட்டுள்ளது. இதில் சி-வடிவ எல்இடி டிஆர்எல்கள், டூயல்-டோன் ஏரோ-ஸ்பெக் அலோய் வீல்ஸ், ஸ்லோப்பிங்க் ரூஃப்லைன், க்ளோஸி பிளாக் பாடி கிளாடிங் மற்றும் டெயில்கேட்டில் முழு நீள எல்இடி லைட் பார்கள் போன்ற அம்சங்களைப் பெறுவீர்கள். இது தவிர, புதிய மஹிந்திரா ட்வின் பீக்ஸ் லோகோ மற்றும் ரியர் டிஃப்பியூசர் ஆகியவையும் இதற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுக்கும். இருப்பினும், ஓஆர்விஎம்கள் மற்றும் டோர் ஹேண்டல்ஸ் மாற்றியமைத்தல் போன்ற சில சிறிய மாற்றங்கள் உள்ளன.
மஹிந்திரா BE.05 இன் இன்டீரியர் சிறப்பாகவும் புத்தம் புதியதாகவும் இருக்கும். இதில் நீங்கள் ஒரு புதிய டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீலைப் பெறுவீர்கள், இதில் பேக்லைட் BE லோகோ இருக்கும். காரில் இரண்டு டிஜிட்டல் ஸ்கிரீன்கள் இருக்கும் - ஒன்று டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன். கியர் லெவரின் வடிவமைப்பு விமானங்களால் ஈர்க்கப்பட்டதாக இருக்கும். டிரைவ் மோட் செலக்டர், ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட், இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் கப் ஹோல்டர்கள் போன்ற அம்சங்களையும் சென்ட்ரல் கன்சோலில் கொண்டிருக்கும். இது தவிர, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற மேம்பட்ட அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.
BE.05 மஹிந்திராவின் புதிய ஆங்கிலோ இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 60kWh பேட்டரியில் இருந்து ஆற்றலைப் பெறும், இது இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வேலை செய்யும். இந்த எஸ்யுவி ஒரு முழு சார்ஜில் சுமார் 500 கிலோமீட்டர் டிரைவிங் ரேஞ்சை வழங்க முடியும், இது நீண்ட தூரத்திற்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்