- BE.05 2025 இன் 2 ஆம் பாதியில் அறிமுகப்படுத்தப்படும்
- ஏற்கனவே டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது
மஹிந்திரா BE.05 EV அறிமுகம் மற்றும் வெளியீட்டு
மஹிந்திரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் BE.05 எஸ்யுவி கான்செப்ட்டை வெளியிட்டது. இப்போது, கார் தயாரிப்பாளர்கள் இந்த மாடலை அக்டோபர் 2025 இல் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, உற்பத்திக்குத் தயாராக இருக்கும் மாடலின் படங்களைப் பெற்றுள்ளோம்.
நியூ BE.05 படங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?
புதிய ஷாட்ஸில் காணப்படுவது போல், உற்பத்திக்கு தயாராக இருக்கும் மஹிந்திரா BE.05 மேலே மிரர் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும். மற்ற இடங்களில், இது பிளாக்-அவுட் ஓஆர்விஎம்ஸ் மற்றும் ஏ மற்றும் பி-பில்லர்ஸ், ஃபன்கி ஸ்பாய்லர், ஒரு ஹூட் ஸ்கூப், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டல்ஸ், ஸ்லோப்பிங்க் ரூஃப் லைன் மற்றும் டெயில்கேட்டில் டக்டெய்ல் ஸ்பாய்லர் போன்ற ஃபிச்சர்ஸ் இருக்கும்.
BE.05 இன்டீரியர் டிசைன் மற்றும் எக்ஸ்டீரியர் விவரங்கள்
எக்ஸ்டீரியரில், BE.05 எலக்ட்ரிக் எஸ்யுவி ஆனது C-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய மல்டி-ஸ்போக் அலோய் வீல்ஸ், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்ஸ், பூட் லிட்டில் எல்இடி லைட் பார், ஆகியவற்றைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ். உள்ளே, மாடலில் மூன்று-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் சீட்ஸ், ஃப்ரீஸ்டாண்டிங் ஃபுல் டிஜிடல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஃபேப்ரிக் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் ஃப்ளோட்டிங் சென்டர் கன்சோல் ஆகியவை இருக்கும். டெக்னாலஜி விவரக்குறிப்புகள் அல்லது பேட்டரி பேக்கின் விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்