- XUV.e8 எலக்ட்ரிக் கார் 2025 இன் தொடக்கத்தில் அறிமுகமாகும்
- மஹிந்திரா 2030 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக முழு அளவிலான எலக்ட்ரிக் மாடல்களைக் கொண்டிருக்கும்
மஹிந்திரா நிறுவனம் 2026-ஆம் நிதியாண்டுக்குள் சுமார் 1.8 லட்சம் மின்சார கார்ஸின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்ய ஒரு மாடலை கூட வழங்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில், இது பரவலாக வழங்க தயாராக உள்ளது. அதன் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் கார்கள் இரண்டு கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். FY-2025 க்குள் ஒரு லட்சம் யூனிட்களையும், FY-2026க்குள் 80,000 யூனிட்களையும் கொண்டு வருவதன் மூலம் எல்லா உற்பத்தி திறனை மேலும் விரிவுபடுத்தும்.
வரும் நாட்களில், மஹிந்திரா நிறுவனம் தனது இவி தயாரிப்பில் விளையாட்டைத் தொடங்கும். மூன்று முதல் நான்கு மாடல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.8 லட்சம் யூனிட்களாக வரும், முதல் ஆண்டில் மாதத்திற்கு 10,000 யூனிட்டுகளுக்கும் குறைவாகவும், இரண்டாவது ஆண்டில் மாதத்திற்கு 15,000 யூனிட்களாகவும் இருக்கும். மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பார்த்தால், 2025 நிதியாண்டின் இறுதிக்குள் பல்வேறு மாடல்களில் மொத்தம் 6.4 லட்சம் யூனிட்களையும், 2026ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் மொத்தம் 7.2 லட்சம் யூனிட்களையும் உற்பத்தி செய்ய மஹிந்திரா இலக்கு வைத்துள்ளது. 2026-ம் நிதியாண்டின் இறுதிக்குள் மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும்.
ஆட்டோமேக்கரிடம் ஏற்கனவே XUV400 எனப்படும் சிறிய எஸ்யுவி இருந்தாலும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் XUV.e8 மாடலுடன் இணைக்கப்படும், அதைத் தொடர்ந்து XUV.e9 (கூபே எஸ்யுவி) போன்ற எலக்ட்ரிக் கார்கள் 2025-ஏப்ரல் மற்றும் BE.05 ஐ 2025-அக்டோபர் இல் இணைக்கப்படும். இவை தவிர BE.05/BE.05 ரால்-இ, BE.07, BE.09 என புதிய பெயர்களில் எலக்ட்ரிக் மாடல்கள் வரவுள்ளன. இதேபோல், மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ மற்றும் பொலேரோ மற்றும் தார் கார்களை 2030 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வெர்ஷனில் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதுவரை, வாகன உற்பத்தியாளர் மஹிந்திரா, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களும் இங்கு தயாரிக்கப்பட்டு உள்நாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று சிறிய குறிப்பை வழங்கியுள்ளது. இருப்பினும், முதலில் இவை ரைட் ஹேண்ட் டிரைவ் (RHD) இடங்களுக்கும் பின்னர் லெஃப்ட் ஹேண்ட் டிரைவ் (LHD) இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்