- அடாப்டிவ் வேரியபள் சஸ்பென்ஷன் கிடைக்கும்
- பிளாக்-அவுட் எலிமென்ட்ஸ் கொண்ட புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட்
லெக்ஸஸ் இந்தியா என்எக்ஸ் 350h ஓவர்டிரெயில் எடிஷன்னை ரூ. 71.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்தது. இது எக்ஸ்க்விசிட் மற்றும் லக்சுரி ட்ரிம்ஸ்க்கு இடையில் உள்ள மாடலாகும். இதில் காஸ்மெட்டிக் அப்டேட்ஸ் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பெறுகின்றன
ஓவர்டிரெயில் மூன் டெசர்ட் எக்ஸ்டீரியர் மற்றும் கான்ட்ராஸ்ட்டிங் எலிமென்ட்ஸ் கொண்ட வண்ணத்தைப் பெறுகிறது. சிக்னேச்சர் ஸ்பிண்டில் கிரில் மற்றும் டோர் ஹேண்டல்ஸ், ஓஆர்விஎம்கள் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை க்ளோஸ் பிளாக் நிறத்தில் செய்யப்பட்டுள்ளன. இது 20 இன்ச் வீல்ஸுடன் பொருத்தப்பட்ட எஃப்-ஸ்போர்ட் மற்றும் லக்சுரி வேரியன்ட்க்கு மாறாக சிறிய 18 இன்ச் வீல்ஸைப் பெறுகிறது.
இன்டீரியரில், என்எக்ஸ் 350h ஓவர்டிரெயிலின் கேபின், 'ஜியோ லேயர்' இன்சர்ட்ஸ் கொண்ட ப்ரௌன் நிற டோர் இன்சர்ட்ஸ் மற்றும் ஃபுல்லி பிளாக் இன்டீரியர் தீம் உள்ளன. இது தவிர, இது 17-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒரு பனோரமிக் சன்ரூஃப், பவ்ர்டு டெயில்கேட், கலர்டு ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஒரு 360-டிகிரி கேமரா மற்றும் ஏடாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
என்எக்ஸ் 350h தொடர்ந்து 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆல்-வீல் டிரைவ் இ-சிவிடீ கியர்பாக்ஸால் கையாளப்படுகிறது, இந்த எஸ்யுவி 243bhp பவரை வெளிப்படுத்திகிறது.
லெக்சஸ் என்எக்ஸ் 350h ஆனது ஆடி Q5, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி, வால்வோ XC60 மற்றும் பிஎம்டபிள்யூ X3 ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்