- நாடு முழுவதும் மொத்தம் 113 கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன
- அதன் ஃப்ரண்ட் மற்றும் ரியர் கேமராக்களில் சிக்கல் ஏற்பட்டது
லெக்சஸ் இந்தியா தனது LS, NX மற்றும் RX ஆகிய மூன்று கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த ரீகால் கார்களின் ஃப்ரண்ட் மற்றும் ரியர் கேமராக்களில் உள்ள குறைபாடு காரணமாக இருக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 113 கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ஏப்ரல் 20, 2023 மற்றும் ஆகஸ்ட் 9, 2023க்கு இடையில் தயாரிக்கப்பட்ட LS 500 மற்றும் LS 500H மாடல்கள் பாதிக்கப்பட்ட வாகனங்களில் அடங்கும். கூடுதலாக, ஜனவரி 17, 2023 மற்றும் பிப்ரவரி 24, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட NX கார்கள் மற்றும் மே 9, 2023 மற்றும் ஆகஸ்ட் 8, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட RX யூனிட்களும் இந்த ரீகாலின் ஒரு பகுதியாகும்.
இருப்பினும், இந்த ரீகால்லின் நோக்கம் கேமராக்களை சரிபார்ப்பதாகவும், ஏதேனும் சிக்கல் கண்டறியப்பட்டால், அது இலவசமாக சரி செய்யப்படும் என்றும் லெக்சஸ் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையுடன் எந்த சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை. சேவைக்கு அழைக்க வாடிக்கையாளர்கள் தங்கள் டீலர் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்