- ஸ்ட்ராங்க் ஹைப்ரிட் இன்ஜினை பெறலாம்
- வரும் வாரங்களில் லான்ச் ஆகலாம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட லெக்சஸின் புதிய லக்சுரி எம்பீவியின் LM வெர்ஷனின் டீஸர்ரை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகும், LM ஆனது லெக்சஸ் லைன் அப்பில் விலை உயர்ந்த கார் ஆகும், மற்றும் வரும் வாரங்களில் டொயோட்டா வெல்ஃபயர் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லெக்சஸ் LM யின் எக்ஸ்டீரியர் டிசைன்
லெக்சஸ் LM அதன் ஃப்ரண்ட்டில் சிக்னேச்சர் ஸ்பிண்டில் டிசைனைக் கொண்டுள்ளது, இது மற்ற லெக்சஸ் மாடல்ஸைப் போலவே இதுளையும் கலர்ட் பாடி மற்றும் இன்டெக்ரேட்டட் டிஆர்எல்ஸுடன் எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் பெறலாம். இது 19 இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் 3,000 மி.மீ வீல்பேஸ் மற்றும் பவர்-ஸ்லைடிங் ரியர் டோர்ஸையும் பெறும்.
லெக்ஸஸ் LM யின் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
சர்வதேச மார்க்கெட்டில் LM ஃபோர், சிக்ஸ் மற்றும் செவன் சீட்டர் லே-அவுட்டில் கிடைக்கிறது. இதன் செவன் சீட்டர், முன் மற்றும் பின் வரிசைகளை பிரிக்கும் கிளாஸ் பகிர்வுடன், பின்புற பயணிகளுக்கு பெரிய 48-இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீனுடன் லவுஞ்ச் அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெல்ஃபயரின் இன்டீரியரை விட இதில் சோலிஸ் ஒயிட் மற்றும் பிளாக் கேபினிலிருந்து தேர்ந்தெடுக்கும் விருப்பத்துடன் பெறலாம். வயர்லெஸ் சார்ஜிங் போர்ட், மினி ஃபிரிட்ஜ் மற்றும் 50 வண்ண ஆம்பியண்ட் லைட்ஸ் போன்ற அம்சங்களுடன் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், LM ஆனது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ப்ரேக் அசிஸ்டுடன் கூடிய ப்ரீ-கோலிஷன் வார்னிங் மற்றும் ப்ரோ ஆக்டிவ் டிரைவ் அசிஸ்ட் போன்ற ஏடாஸ் அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
லெக்ஸஸ் LM இன்ஜின் விவரங்கள்
லெக்சஸ் LM ஆனது சிபியு மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதால், அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளையும் க்ளோபல்-ஸ்பெக் வெர்ஷனில் பகிர்ந்து கொள்ளும். எனவே, இது 2.4-லிட்டர் அல்லது 2.5-லிட்டர் செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் இன்ஜின் விருப்பத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்