- 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் உள்ளது
- இது 0-100கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும்
இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி தனது ப்ரீமியம் ஹைப்ரிட் கார் உருஸ் SE ஐ இந்தியாவில் 4.57 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த பிராண்டின் இது இரண்டாவது ஹைப்ரிட் மாடலாகும்.
இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் உள்ளது, இது அதிகபட்சமாக 789bhp பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் ப்ளக்-இன்-ஹைப்ரிட் டெக்னாலஜி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 25.9kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது 0-100கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும். இவி மோடில் இந்த கார் அதிகபட்சமாக 59 கிமீ டிரைவிங் ரேஞ்சை தருகிறது.
இது தவிர, இதில் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்ஸ், புதிய டெயில் லேம்ப்ஸ் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 23-இன்ச் அலோய் வீல்ஸ் இதில் உள்ளது. அதே நேரத்தில், கேபினுக்குள் புதிய டாஷ்போர்டு பேனல், மாற்றப்பட்ட ஏசி வென்ட்ஸ் மற்றும் லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் ட்ரைவ் மோட்ஸ் கொண்ட 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆடி RS Q8, பென்ட்லீ பென்டைகா மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்