- சோனெட்புதிய டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டை ரூ. 10 லட்சத்தில் பெறுகிறது
- GTX வேரியன்ட் 6 ஏடீ மற்றும் 7 டிசிடீ வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கியா இந்தியா சோனெட்டின் மூன்று புதிய வேரியன்ட்ஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது, ரூ. 9.60 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த புதிய வேரியன்ட்ஸில் GTX மற்றும் HTK+ டர்போ-பெட்ரோல் வேரியன்ட் ஆகியவை அடங்கும்.
GTX வேரியன்ட்டில் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி கேமரா, பேடில் ஷிஃப்டர்ஸ், லேதர் சீட்ஸ், டிரைவ் மற்றும் ட்ராக்ஷன்கன்ட்ரோல் மோட்ஸ் மற்றும் ஆட்டோ அப்/டவுன் சேஃப்டி விண்டோ போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இதன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் HTK வேரியன்ட்டின் விலை ரூ. 9.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது 118bhp பவர் மற்றும் 172Nm டோர்க் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
HTE, HTE (O) மற்றும் HTK வேரியன்ட்ஸில் ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கர் பாயிண்ட் போன்ற சில சிறிய அம்சங்கள் சோனெட் இன் அனைத்து வேரியன்ட்ஸிலும் சேர்க்கப்பட்டுள்ளன. ரியர் வைபர் மற்றும் வாஷர் ஆகியவை HTK (O) வேரியன்ட்டிலும் கிடைக்கின்றன.
HTK+ வேரியன்ட்டில் இப்போது எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கர் பாயிண்ட் பெறுகிறது. HTX வேரியன்ட்டில் வயர்லெஸ் மொபைல் சார்ஜர், 16-இன்ச் டைமண்ட்-கட் அலோய் வீல்ஸ் மற்றும் ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவற்றுடன் வருகிறது.
சோனெட் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ, சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ ஆகியவை அடங்கும்.
புதிய கியா சோனெட்டின் வேரியன்ட் வாரியான விலைகள் இதோ (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்):
வேரியன்ட்ஸ் | இன்ஜின் | ட்ரான்ஸ்மிஷன் | விலை |
சோனெட் HTK | G1.0 TGDi | ஐஎம்டீ | ரூ. 9.60 லட்சம் |
சோனெட் GTX | 1.0 TGDi | 7 டிசிடீ | ரூ. 13.71 லட்சம் |
1.5 CRDi | 6 ஏடீ | ரூ. 14.56 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்