- 1.2 என்ஏ பெட்ரோல் இனிஜினில் பெறலாம்
- டிசம்பர் 2023 க்குள் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகம் ஆகலாம்
சமீபத்தில் கியா இந்தியா தனது சோனெட்டின் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் 1.2 HTK+ வேரியண்ட்டில் சன்ரூஃப் உடன் ரூ. 9.76 லட்சத்தில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த சன்ரூஃப் ஃபீச்சர்ஸ் HTX மற்றும் HTX+ வேரியண்ட்ஸ் உடன் மட்டுமே கிடைக்கபட்டிருந்தது. தற்போது சொனேட் இந்தியாவில் 3.3 லட்சம் யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது.
கியா சொனேட் HTK+ ஃபீச்சர்ஸ்
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் இரண்டு ட்வீட்டர்ஸ் கொண்ட நான்கு ஸ்பீக்கர்ஸுடன் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது. இப்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் சன்ரூஃப்பும் பட்டியலில் சேர்ந்துள்ளது.
சொனேட் 1.2 லிட்டர் HTK+ இன்ஜின் விவரங்கள்
சொனேட் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது, இது 82bhp மற்றும் 115Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இது ஃபைவ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
லான்ச்சின் அதிகாரப்பூர்வ அறிக்கை
கியா இந்தியாவின் சீஃப் சேல்ஸ் மற்றும் பிசினஸ் ஆஃபிசரான மியுங்-சிக் சோன், இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “சோனேட்டின் டிரைவ் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.2 HTK+ வேரியண்ட்டிற்கு எலக்ட்ரிக் சன்ரூஃப் சேர்ப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் விவேகமான லக்சுரி மற்றும் மதிப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். இது ஒரு விதிவிலக்கான கியா உரிமை அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, இது நீடித்த உணர்வை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்