- 11 வண்ண விருப்பங்களில் மற்றும் ஏழு வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
- புக்கிங் டிசம்பர் 20, 2023 அன்று தொடங்கும்
நேற்று, 2024 கியா சோனெட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பிரத்தியேகமாகப் அதன் தகவல்களை நாங்க பெற்றோம். இப்போது, கார் தயாரிப்பாளர் இறுதியாக நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து சீட்டர் கொண்ட எஸ்யுவியை வெளிப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் வென்யூ போட்டியாளருக்கு 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது தான் முதல் பெரிய புதுப்பிப்பாகும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 20, 2023 இல் தொடங்கும்.
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் ஆனது 11 வண்ணங்களில் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் வழங்கப்படும். மோனோடோன் வண்ணத்தில் க்ளேசியர்ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், க்ராவிட்டி க்ரே, அரோரா பிளாக் பேர்ல், இன்டென்ஸ்ரெட், இம்பீரியல் ப்ளூ, கிளியர் ஒயிட், பியூட்டர் ஆலிவ் மற்றும் மேட் கிராஃபைட் நிறத்தில் அடங்கும். மறுபுறம், டூயல் டோனில் பிளாக் ரூஃபுடன் கூடிய இன்டென்ஸ்ரெட் மற்றும் க்ளேசியர்ஒயிட் பேர்ல்ஆகியவை அடங்கும்.
2024 கியா சோனெட்டின் சிறப்பம்சங்கள், தலைகீழ் L-வடிவ எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய திருத்தப்பட்ட முன் ஃபேஷியா, புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய எல்இடி ஃபாக் லைட்ஸ் மற்றும் டெயில்கேட்டின் பின்புறத்தில் ஒரு லைட் பார் ஆகியவை அடங்கும். உள்ளே, கேபினில் ஒரு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெவல் 1 ஏடாஸ் சூட், புதிய ஏர்கான் பேனல், வாய்ஸ்-கன்ட்ரோல் வின்டோ ஃபங்ஷன் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் உள்ளன.
இயந்திர ரீதியாக, புதுப்பிக்கப்பட்ட சோனெட், தற்போதுள்ள மாடலில் உள்ள அதே இன்ஜின்னைத் தக்கவைத்துக் கொள்ளும். இது 82bhp மற்றும் 115Nm டோர்க்கை வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், 114bhp மற்றும் 250Nm டோர்க்கை உருவாக்கும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின், மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் 118bhp மற்றும் 172Nm டிரான்ஸ்மிஷன் விருபத்துடன் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுயல், சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ, சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீகியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படும்.