- டிசம்பர் 14, 2023 அன்று வழங்கப்படும்
- இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது
கியா இந்தியா தனது வரவிருக்கும் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டை டீஸ் செய்துள்ளது. இதில் கார் தயாரிப்பாளர் அதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் அதன் ரியர் ப்ரோஃபைல் லூக்கையும் காட்டியது.
டீசரின் படி, அப்டேட்ட சோனெட்டில் ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைக் கொண்டிருக்கும், இது புதிய செல்டோஸில் வழங்கப்படுகிறது. இது லெவல் 1 ஏடாஸ்ஸை கொண்டுள்ளது, இது ஃப்ரண்ட்டில் மோதளிலிருந்து தப்ப எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங்க் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்ஸ் மற்றும் டெயில்கேட்டில் எல்இடி பார் உள்ளது.
வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களை புதிய சோனெட் கொண்டிருக்கும்.
சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் முன்பு இருந்த அதே இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். டிரான்ஸ்மிஷன் பற்றி பேசுகையில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ மற்றும் செவன் ஸ்பீட் டிஎஸ்ஜி யூனிட்டை இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்