- சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தெரியவரும்
- புதிய எக்ஸ்டீரியர் மற்றும் அப்டேடட் ஃபீச்சர்ஸைப் பெறும்
2023 கியா சோனெட் எப்போது வெளியிடப்படும்?
சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளியீட்டு விவரங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும், கியாவின் அப்டேடட் சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி வரும் மாதங்களில் வெளியிடப்படலாம்.
புதிய சோனெட் எக்ஸ்டீரியர் டிசைன்
புதிய ஸ்பை ஷாட்ஸில் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன, ஆனால் அதன் சில அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது புதிய L-வடிவ எல்இடி டிஆர்எல்ஸ், அப்டேடட் ஹெட்லேம்ப் க்ளஸ்டர், வெர்டிகல் ஃபாக் லைட்ஸ், புதிய டூயல்-டோன் 16-இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் ரூஃப் ரெயில்ஸ், செல்டோஸை போலவே வெர்டிகல் எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் ஹை-மவுண்ட் ஸ்டாப் லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் சோனெட் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
2023 கியா சோனெட்டின் இன்டீரியர் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட புதிய டேஷ்போர்டுடன் எஸ்யுவி சிங்கிள்-பீஸ் யூனிட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், டேஷ்கேம், ஏடாஸ் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்டரி போன்ற அம்சங்களை இதில் வழங்கலாம்.
வரவிருக்கும் சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின் விவரங்கள்
தற்போதைய மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படலாம். மேலும் விவரங்களை லான்ச் அன்று வெளிப்படுத்தலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்