- 11 வண்ண விருபங்களில் மற்றும் 7 வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- இதன் டெலிவரி விரைவில் வரும் வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்
கியா இந்தியா கடந்த மாதம் இந்தியா-ஸ்பெக் சோனெட்டை ரூ. 7.99 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் லான்ச் செய்தது. இது HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-லைன் என 7 வேரியன்ட்ஸ் மற்றும் 11 வண்ண விருபங்களில் கிடைக்கின்றன.
முன் மற்றும் பின்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், புதிய எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ், L-வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் புதிய 16-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்கள், ஆறு ஏர்பேக்குகள், லெவல் 1 ஏடாஸ், 360 டிகிரி கேமரா, ரியர் விண்டோவில் சன் ஷேடுஸ், 10.25-இன்ச் ஃபுல் டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் பவர்ட் டிரைவர் சீட்ஸ் உள்ளிட்ட சில புதுப்பிப்புகளை சோனெட் ஃபேஸ்லிஃப்ட் பெறுகிறது.
புதிய சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. இது 1.2 லிட்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
புதிய 2024 சோனெட்லான்ச்க்குப் பிறகு, இது டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, நிசான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
2024 கியா சோனெட்டின் வேரியன்ட் வாரியான விலைகள்
இன்ஜின் | டிரான்ஸ்மிஷன் | வேரியன்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
1.2-லிட்டர்என்ஏ பெட்ரோல் | 5ஏஎம்டீ | HTE | ரூ. 7.99 லட்சம் |
HTK | ரூ. 8.79 லட்சம் | ||
HTK+ | ரூ. 9.90 லட்சம் | ||
1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் | ஐஎம்டீ | HTK+ | ரூ. 10.49 லட்சம் |
HTX | ரூ. 11.49 லட்சம் | ||
HTX+ | ரூ. 13.39 லட்சம் | ||
7டிசிடீ | HTX | ரூ. 12.29 லட்சம் | |
GTX+ | ரூ. 14.50 லட்சம் | ||
X-line | ரூ. 14.69 லட்சம் | ||
1.5-லிட்டர் டீசல் | 6ஏஎம்டீ | THE | ரூ. 9.79 லட்சம் |
HTK | ரூ. 10.39 லட்சம் | ||
HTK+ | ரூ. 11.39 லட்சம் | ||
HTX | ரூ. 11.99 லட்சம் | ||
HTX+ | ரூ. 13.69 லட்சம் | ||
6ஐஎம்டீ | HTX | ரூ. 12.60 லட்சம் | |
HTX+ | ரூ. 14.39 லட்சம் | ||
6ஏடீ | HTX | ரூ. 12.99 லட்சம் | |
GTX+ | ரூ. 15.50 லட்சம் | ||
X-Line | ரூ. 15.69 லட்சம் |