- 2023 இறுதிக்குள் இந்தியாவில் லான்ச் செய்யப்படலாம்
- புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை பெறும்
இந்த ஆண்டு இறுதியில் லான்ச் செய்யப்படுவதாக இருக்கும் ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட், மீண்டும் ஒருமுறை டெஸ்டிங்கில் காணப்பட்டது. இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியின் ஸ்பை படங்களில் இந்த இன்டீரியர் பற்றி சில விஷயங்கள் இதில் வெளிப்படுத்துகின்றன.
படங்களில் காணப்படுவது போல், புதிய கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் டூயல் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், செல்டோஸ்-ஈர்க்கப்பட்ட எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் புதிய டூயல்-டோன் அலோய் வீல்ஸ் போன்ற வெளிப்புற புதுப்பிப்புகளைப் பெறும். இது புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனாவைப் பெறுகிறது.
2024 கியாசோனெட் ஆனது, இன்டீரியரில் ஏசிக்காக ரிடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டூயல் டேன் மற்றும் பிளாக் அப்ஹோல்ஸ்டரி, ரியர் ஆர்ம்ரெஸ்ட் கப் ஹோல்டர் உடன் வரும். மேலும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், த்ரீ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், ஸ்டோரேஜுடன் கூடிய முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவையும் வழங்கப்படும்.
இப்போ இருக்கும் அதே இன்ஜின் தொகுப்பிலிருந்து வரவிருக்கும் சோனெட் ஃபேஸ்லிஃப்ட் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகியவை இதில் அடங்கும். மாடலின் விலைகள் டிசம்பர் 2023 இல் அறிவிக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்