- 2023 இறுதிக்குள் கியா சொனேட் ஃபேஸ்லிஃப்ட் லான்ச் செய்யப்படலாம்
- இப்போ இருக்கிற அதே இன்ஜினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கியா இந்தியாவின் சோனெட் ஃபேஸ்லிஃப்ட் பல முறை டெஸ்டிங்கில் காணப்பட்டது, இது இந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம். ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி பிரெஸ்ஸாவுடன் போட்டியிடும் இந்த கியா சொனேட்டின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இது புதிய 16-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸுடன் வரும். பின்புறத்தில், இந்த மாடல் கவர்ச்சிகரமான டெயில்லைட்டை பெறுகிறது, இது முற்றிலும் புதியது மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் போன்ற எல்இடி இன்சர்ட்ஸை பெறும். இது ஹை-மவுண்டெட் ஸ்டாப் லைட் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனாவுடன் வழங்கப்படும்.
கியா சோனெட்டின் உட்புறத்தில் ஏடாஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டேஷ்கேம், புதிய அப்ஹோல்ஸ்டரி மற்றும் பல அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மாடலில் எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் வழங்கப்படும்.
புதிய சோனெட் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படலாம். இதில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள்க்கு எங்களுடன் இனைந்து இருங்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்