- 2020ல் இந்தியாவில் அறிமுகமானது
- ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஜனவரி 2024 இல் லான்ச் செய்யப்படும்
கியா செல்டோஸுக்குப் பிறகு, கார் தயாரிப்பாளர் 2020 ஆம் ஆண்டில் சோனெட் எஸ்யுவியை அறிமுகப்படுத்தினார். இந்த ஐந்து சீட்டர் கொண்ட எஸ்யுவி வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் காரில் ஒன்றாக உள்ளது. இப்போது கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் 3.68 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது, கியா சோனெட் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-லைன் ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவியின் ஆரம்ப விலை ரூ. 7.79 லட்சம் மற்றும் டாப்-ஸ்பெக் X-லைன் வேரியன்ட்டின் விலை ரூ. 14.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. கியா சோனெட்டை 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வாங்கலாம்.
இது தவிர, கியா சமீபத்தில் சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ஜனவரி 2024 இல் அறிவிக்கப்படும். இந்த சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக இந்த மாடல் புதுப்பிக்கப்படுகிறது. இது ஏழு வேரியன்ட்ஸ் மற்றும் 11 வண்ண விருப்பங்களிலும் வழங்கப்படுகிறது. கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் முன்பு இருந்த அதே இன்ஜின் இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்