- டீசல் வேரியண்ட்டில் ஐஎம்டீ கியர்பாக்ஸ் பெறும்
- டர்போ-பெட்ரோல் இன்ஜின் நிறுத்தப்பட்டது
மார்ச் 2023 இல் இந்தியாவில் BS6 ஃபேஸ் 2 அப்டேட்டுடன் கியா அதிகாரப்பூர்வமாக செல்டோஸை அறிமுகப்படுத்தியது. இந்த புதுப்பிக்கப்பட்ட எஸ்யுவி ஆனது HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X லைன் ஆகிய ஏழு ட்ரிம்ஸில் வழங்கப்படுகிறது. கார் தயாரிப்பாளர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை நிறுத்திவிட்டது, மற்ற இன்ஜின்ஸ்க்கு ஆர்டிஇ மற்றும் E20 அப்டேட் வழங்கப்பட்டுள்ளன.
தமில்நாட்டின் முதல் 10 நகரங்களில் கியா செல்டோஸின் விலை பின்வருபவை:
கியா செல்டோஸின் ஆன் ரோடு விலை:
நகரங்கள் | பேஸ் வேரியண்ட் | டாப் வேரியண்ட் |
சென்னை | ரூ. 13.16 லட்சம் | ரூ. 23.59 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 13.28 லட்சம் | ரூ. 23.79 லட்சம் |
மதுரை | ரூ. 13.13 லட்சம் | ரூ. 23.55 லட்சம் |
திருச்சி | ரூ. 13.28 லட்சம் | ரூ. 23.79 லட்சம் |
சேலம் | ரூ. 13.13 லட்சம் | ரூ. 23.55 லட்சம் |
பாண்டிச்சேரி (யூனியன் பிரதேசம்) | ரூ. 12.39 லட்சம் | ரூ. 22.21 லட்சம் |
வேலூர் | ரூ. 13.28 லட்சம் | ரூ. 23.79 லட்சம் |
தூத்துக்குடி | ரூ. 13.28 லட்சம் | ரூ. 23.79 லட்சம் |
திருப்பூர் | ரூ. 13.28 லட்சம் | ரூ. 23.79 லட்சம் |
ஈரோடு | ரூ. 13.28 லட்சம் | ரூ. 23.79 லட்சம் |
கியா செல்டோஸ் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:
கியா செல்டோஸ் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 113bhp மற்றும் 144Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இன்ஜினில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 113bhp மற்றும் 250Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இது சிக்ஸ்- ஸ்பீட் ஐஎம்டீ மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின்ஸும் ஐடில் ஸ்டார்ட்/ ஸ்டாப் டெக்னாலஜியை பெறுகின்றன.
கியா செல்டோஸ் போட்டியாளர்கள்:
கியா செல்டோஸ் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் க்ரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்