- இரண்டு புதிய வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன
- ரூ. 10.90 லட்சத்தில் தொடங்குகிறது
இந்தியாவில் கியா தனது மிகவும் பிரபலமான எஸ்யுவி செல்டோஸின் விலையை உயர்த்தியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக இருக்கும் இதன் விலை தற்போது ரூ. 10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றன. இதன் விளைவாக, ஏப்ரல் மாதத்தில் செல்டோஸ் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 67,000 பிரீமியம் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த முன்பதிவுத் தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டைப் பொறுத்தது.
கியா செல்டோஸ் ஆனது HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX ப்ளஸ் (S), GTX+, X-லைன் (S) மற்றும் X-லைன் ஆகிய ஒன்பது வேரியன்ட்ஸில்பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டைப் பொறுத்து, கியா செல்டோஸ் விலை ரூ. 2,000 முதல் ரூ. 67,000 அதிகரிக்கலாம். இதன் மூலம் தற்போது செல்டோஸின் விலை ரூ. 10.90 லட்சம் முதல் ரூ. 20.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). கியா செல்டோஸ் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் மற்றும் ஆன்-ரோடு விலை விவரங்களை கார்வாலே வெப்சைட்டிற்க்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில், கொரிய வாகன உற்பத்தியாளர் HTK+ ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்ஸுடன் ரூ. 15.40 லட்சம் மற்றும் ரூ. 16.90 லட்சம். புதிய வேரியண்ட் டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்கள், டிரைவ் டிராக்ஷன் கன்ட்ரோல் மோடுகள் மற்றும் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்