- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸில் கிடைக்கும்
- வெயிட்டிங் பீரியட் ஒன்பது முதல் ஏழு வாரங்களாக குறைக்கப்பட்டது
கியா இந்தியா சமீபத்தில் தனது அப்டேடட் செல்டோஸ்க்கு இரண்டு மாதங்களுக்குள் 50,000 முன்பதிவுகளை பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. இப்போது, பண்டிகை காலம் என்பதால், இந்த பிராண்ட் GTX ப்ளஸ் (S) மற்றும் X-லைன் (S) இன் இரண்டு புதிய வேரியண்ட்ஸை ஏடாஸ் ஃபீச்சர்ஸுடன் ரூ. 19.40 லட்சம் மற்றும் ரூ. 19.60 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வேரியண்ட்ஸ் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜினில் கிடைக்கின்றன, முந்தையது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிடுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேரியண்ட்ஸ் செல்டோஸ் வரிசையில் HTX ப்ளஸ் மற்றும் X-லைன் மாடல்ஸ்க்கு இடையில் இருக்கும்.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த வேரியண்ட்டில் 17 பாதுகாப்பு அம்சங்கள், லெவல் 2 ஏடாஸ் சூட், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் 18-இன்ச் க்ளோஸி அலோய் வீல்ஸ் ஆகியவை உள்ளன. அது மட்டுமின்றிவாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.25,000 செலுத்துவதன் மூலம் ஃபுல் பிளாக் ரூஃப் லைனிங்கில் தேர்வு செய்யலாம்.
இது தவிர, கியா செல்டோஸ் எஸ்யுவியின் சராசரி காத்திருப்பு காலம் முன்பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஏழு முதல் ஒன்பது வாரங்கள் ஆகும், இது முன்பு 15 முதல் 16 வாரங்கள் வரை இருந்தன.
கியா இந்தியாவின் நேஷனல் ஹெட் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் ஹர்தீப் சிங் ப்ரார், “எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யுவியை மிகவும் விரும்புவதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய வேரியண்ட்ஸ் தீபாவளிக்கு முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம், இதற்காக காத்திருக்கும் காலம் 15-16 வாரங்களில் இருந்து ஏழு முதல் ஒன்பது வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. எங்களின் இளம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதே எங்களின் முயற்சியாக இருந்து வருகிறது” என்று கூறினார்.
புதிய கியா செல்டோஸின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்ஜின் | வேரியண்ட் | டிரான்ஸ்மிஷன் | எக்ஸ்-ஷோரூம்விலை |
1.5-லிட்டர் டீ-ஜிடிஐ பெட்ரோல் | GTX ப்ளஸ் (S) | செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் | ரூ. 19.40 லட்சம் |
X-லைன் (S) | ரூ. 19.60 லட்சம் | ||
1.5-லிட்டர் சிஆர்டிஐ டீசல் | GTX ப்ளஸ் (S) | சிக்ஸ்-ஸ்பீட் ஏஎம்டீ யூனிட் | ரூ. 19.40 லட்சம் |
X-லைன் (S) | ரூ. 19.60 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்