- இந்தியாவில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விலைகள் வரும் மாதங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
- இது திருத்தப்பட்ட எக்ஸ்டீரியர் டிசைனைப் பெறுகிறது
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் லான்ச் மற்றும் புக்கிங் விவரங்கள்
கியா இந்தியா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செல்டோஸை ஜூலை 4 ஆம் தேதி நாட்டில் வெளியிடவுள்ளது. இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்ஸில் மாடலுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.
2023 செல்டோஸ்: புதிய ஸ்பை ஷாட்ஸ் என்ன வெளிப்படுத்துகின்றது?
இணையத்தில் பகிரப்பட்ட புதிய ஸ்பை ஷாட்ஸ், மிட்-ஸ்பெக் வேரியண்டில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டைப் பற்றிய புதிய தோற்றத்தை தருகின்றது. பிளாக் நிற ஷேடில், மறைக்கப்படாத டெஸ்ட் மியூல், புதிய எல்இடி டிஆர்எல்ஸ் வடிவத்தில் புதுப்பிப்புகளைப் பெறுகிறது, அவை இப்போது மெயின் ஹெட்லைட் க்ளஸ்டர் வரை நீட்டிக்கப்படுகின்றது, புதிய கிரில்லுக்கு மேலே ஒரு எல்இடி லைட் பார் மற்றும் புதிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்ஸ் சில்வர் ஃபினிஷில் உள்ளது. இது புதிய ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ், ட்வீக் செய்யப்பட்ட ரியர் பம்பர், உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்ப் கொண்ட இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் பூட்லிடில் எல்இடி லைட் பார் இருக்கும். கன்மெட்டல் ஃபினிஷ் கொண்ட புதிய அலோய் வீல்ஸ் வழங்கப்பட உள்ளது.
புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
2023 செல்டோஸின் முந்தைய ஸ்பை ஷாட்ஸ், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல், டூயல்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல், புதிய பட்டன்ஸ் மற்றும் ஏசி கண்ட்ரோல்ஸ்க்கான லேஅவுட் மற்றும் திருத்தப்பட்ட ஏர் வென்ட் வடிவமைப்பு ஆகியவற்றைக் குறிப்பெடுத்துள்ளது. இந்த மாடல் ஏற்கனவே 360 டிகிரி கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்டட் செல்டோஸில் பனோரமிக் யூனிட் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்டட் செல்டோஸ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
அதிகாரப்பூர்வ விவரங்கள் அறியப்படாத நிலையில், புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் அதே 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின்ஸைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் 1.4 லிட்டர் பவர்ட்ரெயின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டது மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டாரால் மாற்றப்படலாம்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்