அறிமுகம்
கியா இந்தியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. உற்பத்தியாளர் ஐந்து சீட்டர் கொண்ட எஸ்யுவியின் முன்பதிவை ஜூலை 14, 2023 அன்று தொடங்கினார். ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி முதல் நாளில் 13,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைக் குவித்ததாகவும், அதில் 1,973 வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாகவும் பிராண்ட் அறிவித்தது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களுக்கு மேலும் படிக்கவும்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்ஸ் மற்றும் வண்ணங்கள்
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் டெக் லைன், GT லைன் மற்றும் X லைன் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. டெக் லைன் மேலும் ஐந்து ட்ரிம்ஸாக பிரிக்கப்பட்டுள்ளது - HTE, HTK, HTK+, HTX மற்றும் HTX+. வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யுவியை எட்டு மோனோடோன் மற்றும் இரண்டு டூயல் டோன் வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
மோனோடோன் ஷேட்ஸில் பியூட்டர் ஆலிவர், க்ளியர் ஒயிட், ஸ்பார்க்லிங் சில்வர், க்ராவிட்டி க்ரே, அரோரா பிளாக் பேர்ல், க்ளேசியர் ஒயிட், இன்டென்ஸ் ரெட் மற்றும் இம்பீரியல் ப்ளூ ஆகியவை அடங்கும். மறுபுறம், டூயல்-டோன் வண்ணங்களில், அரோரா பிளாக் பேர்ல் உடன் இன்டென்ஸ் ரெட் மற்றும் க்ளேசியர் ஒயிட் பேர்ல் ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், மேட் கிராஃபைட் வண்ணம் X-லைன் வேரியண்ட் உடன் பிரத்தியேகமாக கிடைக்கிறது.
2023 கியா செல்டோஸ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5-டீசல் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகிய மூன்று விருப்பங்களில் வழங்குகிறது. இந்த 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் 113bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஐவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
1.5-லிட்டர் டீசல் 113bhp மற்றும் 250Nm டோர்க்கை வெளிப்படுத்தும் மற்றும் ஐஎம்டீ யூனிட் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். மறுபுறம் புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல், 158bhp மற்றும் 253Nm டோர்க்கை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் டியூட்டிஸில் சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ மூலம் இயங்கப்படுகின்றது.
புதிய கியா செல்டோஸ் எக்ஸ்டீரியர்
புதுப்பிக்கப்பட்ட செல்டோஸில் புதிய கிரில், எல்இடி ஃபோக் லைட்ஸ் உள்ளடக்கிய புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் லோவர் கிரில் கொண்ட புதிய ஸ்கிட் பிளேட்டைப் பெறுகிறது. அதுமட்டுமின்றி, இது புதிய எல்இடி ஹெட்லேம்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்ஸ், போன்னெட் குறுக்கே இயங்கும் லைட் பார், முன் பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் ஏடாஸ் ரேடார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய 17-இன்ச் டூயல்-டோன் அலோலாய் வீல்ஸைத் தவிர, எஸ்யுவியின் ப்ரொஃபைல் தற்போதுள்ள மாடலில் உள்ளதைப் போலவே உள்ளது. பின்புறத்தில், டெயில்கேட் முழுவதும் எல்இடி பார் மூலம் இணைக்கப்பட்ட புதிய தலைகீழ் எல் வடிவ டெயில்லைட்ஸைப் பெறுகிறது.
அப்டேடட் கியா செல்டோஸ் இன்டீரியர்
இன்டீரியரில், புதிய வாய்ஸ்-கண்ட்ரோல்ட் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கான டூயல் 10.25-இன்ச் இணைக்கப்பட்ட ஸ்கிரீன் ஆகியவை முக்கிய மாற்றங்களாகும். இதில் GT லைன் ஒயிட் இன்சர்ட்ஸுடன் ஆல்-பிளாக் கேபினைக் கொண்டிருக்கும் மற்றும் டெக் லைன் ஆனது பிளாக் மற்றும் ப்ரௌன் ஷேட்ஸ் உடன் டூயல்-டோன் தீம் கேபினைப் பெறுகிறது.
மற்ற முக்கிய குறிப்பிடத்தக்க அம்சங்களில் எட்டு-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், பவர்-அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், இது எட்டு இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர், எலக்ட்ரோனிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் டூயல் ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது.
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் சேஃப்டி ஃபீச்சர்ஸ்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2023 கியா செல்டோஸ் ஆறு ஏர்பேக்ஸ், எலக்ட்ரோனிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், வெஹிகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டீபிஎம்எஸ் மற்றும் நினைவூட்டலுடன் கூடிய மூன்று-பாயிண்ட் சீட் பெல்ட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், எஸ்யுவியின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்ஸ் 17 சேஃப்டி ஃபீச்சர்ஸைக் கொண்ட ஏடாஸ் தொகுப்பைப் பெறுகின்றது. இதில் ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங் மற்றும் அசிஸ்ட், லேன் கீப் & ஃபொலொ அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் வார்னிங், ப்ளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ரியர் கிராஸ்-ட்ராஃபிக் அசிஸ்ட் மற்றும் ஸ்டாப் & கோ ஃபங்ஷன் உடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை இதில் அடங்கும்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விலை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு.
இன்ஜின் | வேரியண்ட் | எக்ஸ்-ஷோரூம் விலை |
1.5- லிட்டர் பெட்ரோல் | HTE 6MT | ரூ. 10,89,900 |
HTK 6MT | ரூ. 12,09,900 | |
HTK+ 6MT | ரூ. 13,49,900 | |
HTX 6MT | ரூ. 15,19,900 | |
HTX ஐவிடீ | ரூ. 16,59,900 | |
1.5- லிட்டர் டர்போ-பெட்ரோல் | HTK+ 6iMT | ரூ. 14,99,900 |
HTX+ 6iMT | ரூ. 18,29,900 | |
HTX+ 7DCT | ரூ. 19,19,900 | |
GTX+ 7DCT | ரூ. 19,79,900 | |
X- லைன் 7DCT | ரூ. 19,99,900 | |
1.5- லிட்டர் டீசல் | HTE ஐஎம்டீ | ரூ. 11,99,900 |
HTK ஐஎம்டீ | ரூ. 13,59,900 | |
HTK+ ஐஎம்டீ | ரூ. 14,99,900 | |
HTX ஐஎம்டீ | ரூ. 16,69,900 | |
HTX+ ஐஎம்டீ | ரூ. 18,29,900 | |
HTX 6AT | ரூ. 18,19,900 | |
GTX+ 6AT | ரூ. 19,79,900 | |
X- லைன் 6AT | ரூ. 19,99,900 |
2023 கியா செல்டோஸ் போட்டியாளர்கள்
2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் போட்டியாளர்களில் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்