- செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஏழு வரியண்ட்ஸில் வழங்கபடுகின்றன
- இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.10.90 லட்சம்
கியா இந்தியாவில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை ஜூலை 21, 2023 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த அப்டேடட் எஸ்யுவி மூன்று ட்ரிம்ஸில் வழங்கப்படுகிறது - டெக் லைன், ஜிடீ லைன் மற்றும் எக்ஸ் லைன் ஆரம்ப விலை ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மேலும், இது HTE, HTK, HTK ப்ளஸ், HTX, HTX ப்ளஸ், GTX ப்ளஸ் மற்றும் எக்ஸ் லைன் உட்பட ஏழு வேரியண்ட்ஸில் கிடைக்கும். இப்போது, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யுவியின் டெலிவரியைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் புக்கிங்ஸ்
புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் முன்பதிவு ஜூலை 14 அன்று தொடங்கியது, ஒரே நாளில் 13,000 ஆர்டர்ஸ் பதிவு செய்யப்பட்டன. இதில், ஏற்கனவே உள்ள 1,973 செல்டோஸ் வாடிக்கையாளர்கள் கே-கோட் திட்டத்தின் மூலம் அப்டேடட் ஃபேஸ்லிஃப்ட்டின் மாடலை முன்பதிவு செய்துள்ளனர்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின்
செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கின்றன- 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல், 1.5-லிட்டர் டீசல் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின். என்ஏ பெட்ரோல் மோட்டார் 113bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ள, அதிக சக்தி வாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் 158bhp மற்றும் 253Nm டோர்க்கை உருவாக்குகிறது. பின்னர், டீசல் மில் 114bhp மற்றும் 250Nm டோர்க்கை உருவாக்குகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல், சிவிடீ, ஐஎம்டீ, டோர்க் கன்வர்டர் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வண்ண விருபங்கள்
வாடிக்கையாளர்கள் இதை பியூட்டர் ஆலிவ், ஸ்பார்க்லிங் சில்வர், க்ளியர் ஒயிட், க்ராவிட்டி க்ரே, அரோரா பிளாக் பேர்ல், இம்பீரியல் ப்ளூ, இன்டென்ஸ் ரெட், க்ளேசியர் ஒயிட், இன்டென்ஸ் ரெட் உடன் அரோரா பிளாக் பேர்ல், மற்றும் க்ளேசியர் ஒயிட் உடன் அரோரா பிளாக் பேர்ல் உள்ளிட்ட 10 வண்ணங்களில் பெறுவிற்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்