- இது ஜூலை 2023 அன்று லான்ச் செய்யப்பட்டது
- 80 சதவீத வடிக்கையாளர்கள் டாப் வேரியன்ட்டை தேர்ந்தெடுத்தனர்
கொரிய வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய செல்டோஸுக்கு 1 லட்சம் முன்பதிவுகளை பதிவு செய்து புதிய உயரத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனம் ஒரு மாதத்தில் சுமார் 13,500 யூனிட்கள் முன்பதிவு செய்து இந்த எண்ணிக்கையை எட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது.
பிராண்டின் படி, 80 சதவீத வாடிக்கையாளர்கள் புதிய கியா செல்டோஸின் டாப் வேரியன்டான HTK+ தேர்ந்தெடுத்துள்ளனர். ஏடாஸ் அம்சங்களுடன் கூடிய இந்த வேரியன்ட் 40 சதவீத வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகின்றன. மேலும் மொத்த வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் தங்களின் புதிய செல்டோஸில் பனோரமிக் சன்ரூஃப் ஃபீச்சர்ரை விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் லான்ச் செய்ததிலிருந்து, இந்த எஸ்யுவியின் 13,000 யூனிட்ஸ் முன்பதிவு செய்யப்பட்டன. அடுத்த மாதம், ஆகஸ்டில், அதன் முன்பதிவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது மற்றும் முன்பதிவுகளின் எண்ணிக்கை 31,000 ஐ எட்டியது. இதற்கிடையில், செல்டோஸின் விலையும் அதிகரித்துள்ளது, இப்போது கியாவின் இந்த எஸ்யுவியின் ஆரம்ப விலை ரூ. 10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
கியா செல்டோஸின் வெற்றி குறித்து கியா இந்தியாவின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரி மியுங்-சிக் ஷா கூறுகையில், “மார்க்கெட்டில் கியா செல்டோஸின் வெற்றியைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சந்தையில் இருக்கும் தயாரிப்புகளில் கியா செல்டோஸ் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த தேர்வாக இருப்பதை வாடிக்கையாளர்களின் அன்பு காட்டுகிறது. கியா மற்றும் செல்டோஸின் ரசிகர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஏனெனில் எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பே எங்களை சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்