கியா செல்டோஸ் இந்தியாவில் முதல் டீசல் ஐஎம்டீ எஸ்யுவி ஆகும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், கார் தயாரிப்பாளர் இந்த மாடலில் சில புதிய அம்சங்களைக் கொண்டு வந்தனர், அதே நேரத்தில் இந்த அப்டேட்ஸை மற்ற வேரியண்ட்ஸிலும் வழங்குகின்றார். சமீபத்தில் நாங்கள் மிட்-ஸ்பெக் HTK+ வெர்ஷனை ஓட்டினோம். அதன் படத்தொகுப்பு இதோ.
முதலாவதாக, மிகவும் வெளிப்படையான மாற்றம் கியர்பாக்ஸ் ஆகும். கியா செல்டோஸில் 113bhp 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் புதிய சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ (இண்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கிளட்ச்லெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் முன்பு இந்த மிட்-லெவல் HTK ப்ளஸ் வேரியண்டில் மட்டுமே கிடைத்தது, ஆனால் இப்போது டாப்-ஸ்பெக் HTX ப்ளஸ் வேரியண்டிலும் வழங்கப்படுகிறது.
சுவாரஸ்யமாக, கார் தயாரிப்பாளர் தங்கள் பெட்ரோல்-இயங்கும் மாடல்ஸில் ஐஎம்டீ கியர்பாக்ஸை வழங்குகிறது, ஆனால் இது முதல் முறையாக கியர்பாக்ஸை டீசல் இன்ஜினுடன் இணைக்கிறது.
இது HTK+ வேரியண்ட் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்க்கு எல்இடி லேம்ப்ஸ், டூயல்-டோன் பெரிய அலோய் வீல்ஸ்க்குப் பதிலாக சிங்கிள்-டோன் அலோய்ஸ் மற்றும் டெயில் லேம்ப்ஸில் எல்இடி ஒருங்கிணைப்பு போன்ற பல அம்சங்களை இது இழக்கிறது.
இதேபோல், அதன் கேபினுக்குள், டாப்-ஸ்பெக் மாடல்ஸில் உள்ளதை விட ஸ்கிரீன் சிறியது, மேலும் இது ஒரு அனலொக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பெறுகிறது. மேலும், சீட்ஸ் லெதருக்கு பதிலாக ஃபேப்ரிகால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, பாதுகாபிற்காக சைட் ஏர்பேக்ஸ், பின்புற டிஸ்க் ப்ரேக்ஸ், வெஹிகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (விஎஸ்எம்) மற்றும் இஎஸ்சி போன்ற பல அம்சங்கள் அனைத்து வேரியண்ட்ஸிலும் நிலையானவை.
பனோரமிக் சன்ரூஃப், புதிய அலோய்ஸ் போன்றவற்றுடன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகப்படுத்த கியா திட்டமிட்டிருந்தாலும், தற்போதைய பதிப்பைக் கருத்தில் கொள்வது மதிப்புள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்