- உயர் வேரியண்ட்ஸ் அதிக தேவையை ஈர்க்கின்றன
- புதிய பியூட்டர் ஆலிவ் நிறத்துக்கு 19 சதவிகிதம் முன்பதிவுகளை பெற்றது
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் ஒரு மாதத்திற்குள் 31,716 முன்பதிவுகளைச் செய்துள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. இது ரூ.10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த மிட்-சைஸ் எஸ்யுவி பல இன்ஜின் விருப்பங்கள், 18 வேரியண்ட்ஸ் மற்றும் ஏடாஸ் டெக்னாலஜியுடன் வழங்கப்படுகிறது.
புதிய கியா செல்டோஸின் வேரியண்ட்ஸ் மற்றும் ஃபீச்சர்ஸ்
ஏறக்குறைய 17,412 (55 சதவீதம்) முன்பதிவுகள் உயர் வேரியண்ட்ஸ்க்கு (HTX மற்றும் அதற்கு மேற்பட்டவை) இருந்தன. மேலும், 19 சதவீத முன்பதிவுகள் புதியபியூட்டர் ஆலிவ் ஷேட்க்காக பதிவு செய்யப்பட்டன.
செல்டோஸ் இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன், ஐந்து இன்டீரியர் தீம்ஸ், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஏடாஸ் டெக்னாலஜியுடன் புதுப்பிக்கப்பட்ட கேபினை கொண்டுள்ளது
கியா செல்டோஸ் இன்ஜின் மற்றும் போட்டியாளர்கள்
செல்டோஸ் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸில் கிடைக்கின்றன. அனைத்து இன்ஜின்ஸும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகின்றன மற்றும் BS6 ஃபேஸ் 2 க்கு இணங்குகின்றன.
எஸ்யுவி செக்மென்ட்டில் செல்டோஸ் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்