- ரூ. 10.89 லட்சத்தில் ஜூலை 21 அன்று இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது
- மூன்று இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது
ஏஆர்ஏஐ மைலேஜ்
ரூ. 10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் இதில் உள்ளடக்கியுள்ளோம். இந்த பட்டியலிலிருந்து முதல் டிரைவ் மதிப்பாய்வு வரை ஒவ்வொரு வேரியண்ட்டின் விலையையும், இதில் அடைக்கி உள்ளோம். கியா செல்டோஸிற்கான ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜை பற்றி இதில் பார்க்கலாம்.
கியா செல்டோஸ் 1.5 லிட்டர் பெட்ரோல்
இந்த இன்ஜின் HTE, HTK, HTK+ மற்றும் HTX வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இது 133bhp/144Nm உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ யூனிட் உடன் இனைக்கப்பட்டுருக்கலாம். எம்டீ-பவர்ட் மாடல் ஏஆர்ஏஐ லிட்டருக்கு 17 கி.மீ மைலேஜை பெறும், சிவிடீ மாடல் லிட்டருக்கு 17.7 கி.மீ மைலேஜைக் குடுக்கும்.
கியா செல்டோஸ் 1.5 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல்
இந்த இன்ஜின் HTK, HTK+, HTX+, GTX+ மற்றும் எக்ஸ்-லைன் வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இது 158bhp/253Nm உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் கிளட்ச்லெஸ் மேனுவல் (ஐஎம்டீ) அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் உடன் இனைக்கப்படலாம். ஐஎம்டீ யில் இயங்கும் இந்த மாடல் ஏஆர்ஏஐ மைலேஜின்படி லிட்டருக்கு 17.7 கி.மீ மற்றும் டிசிடீயில் இயங்கும் மாடல் ஏஆர்ஏஐ மைலேஜின்படி லிட்டருக்கு 17.9 கி.மீ ஆகும்.
கியா செல்டோஸ் 1.5 லிட்டர் டீசல்
இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், செல்டோஸ் ரேஞ்சின் அனைத்து வேரியண்ட்ஸிலும் கிடைக்கிறது. இது 114bhp/250Nm உற்பத்தி செய்கிறது மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஐஎம்டீ அல்லது சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கண்வர்டர் ஆட்டோமேட்டிக் மூலம் இருக்கலாம். இந்த ஐஎம்டீ இன்ஜினின் ஏஆர்ஏஐ மைலேஜ் லிட்டருக்கு 20.7 கி.மீ மற்றும் ஏடீ இன்ஜினின் ஏஆர்ஏஐ மைலேஜ் லிட்டருக்கு 19.1 கி.மீ ஆகும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்