- 2024 இன் மூன்றாம் காலாண்டில் அறிமுகமாகும்
- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருபங்களில் கிடைக்கும்
கியா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது. நிறுவனம் இந்தியாவில் கியா சோனெட் மற்றும் செல்டோஸின் ஜிடீ-லைன் வெர்ஷனின் கம்மி விலை வேரியன்ட்ஸை அறிமுகப்படுத்த போகிறது. இந்த வேரியன்ட்ஸ் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்தைக்கு வரும் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விருப்பங்களிலும் கிடைக்கும்.
புதிய திட்டம்
தற்போது, சோனெட்டின் பேஸ் ஜிடீ வேரியன்ட்டிற்கும் எச்டீ வேரியன்ட்டிற்கும் இடையே ரூ. 10,000 வித்தியாசம் உள்ளது, அதுவே செல்டோஸில் இந்த வேரியன்ட் ரூ. 32,000 வரை உள்ளது. கம்மி விலை புதிய ஜிடீ வேரியன்ட்ஸின் இன்ஜின் விருப்பங்கள் உடன் டிசைன் மற்றும் அம்சங்களில் இரண்டு வேரியன்ட்ஸும் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தும். இதன் மூலம், இரண்டு கார்ஸின் டாப்-ஸ்பெக் ஆக X-லைன் வேரியன்ட் இருக்கும்.
க்ளாவிஸ்/சைரோஸ் தயாரிப்பு
இந்த புதிய வேரியன்ட்டின் விரிவாக்கம், வரவிருக்கும் க்ளாவிஸ்/சைரோஸிலும் இந்த வகை வேரியன்ட்ஸைக் காணலாம். இந்த புதிய கார் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் மற்றும் அதன் இன்ஜின் சோனெட் உடன் பகிரப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்