- பிப்ரவரி 28 முதல் ஜூலை 13, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட மாடல்கள் திரும்ப அழைக்கப்பட்டது
- இதன் சிவிடீ டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினில் வந்தது பிரச்சனை
கியா இந்தியா தனது செல்டோஸ் எஸ்யுவியை நாட்டில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 28 முதல் ஜூலை 13, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சிவிடீ டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் செல்டோஸின் 4,358 யூனிட்களை கார் தயாரிப்பாளர் திரும்பப் பெற்றுள்ளார். எலக்ட்ரானிக் ஆயில் பம்ப் கன்ட்ரோலரில் ஏற்படக்கூடிய குறைபாட்டை சரிசெய்வதே இந்த ரீகால்க்கான காரணம், இது இந்த டிரான்ஸ்மிஷன் வேரியன்ட் கொண்ட எஸ்யுவியின் பர்ஃபார்மன்ஸை பாதிக்கலாம்.
வாகன உற்பத்தியாளர் செல்டோஸ் உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட பாகங்களை இலவசமாக மாற்றுவார். தற்போது இது HTE, HTK, HTK Plus, HTX, HTX ப்ளஸ், GTX ப்ளஸ் மற்றும் X-லைன் ஆகிய ஏழு வேரியன்ட்ஸில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஃபைவ் சீட்டர் எஸ்யுவியின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 10.90 லட்சம்.
மற்ற செய்திகளில், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் நாட்டில் ஒரு லட்சம் முன்பதிவுகளை கடந்தது. ஜூலை 2023 இல் லான்ச் செய்யப்பட்ட இந்த எஸ்யுவி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 13,500 முன்பதிவுகளைப் பெறுகிறது, இதில் 80 சதவீத வாங்குபவர்கள் டாப்-ஸ்பெக் மாடலை தேர்வு செய்கிறார்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்