- கியா தற்போது செல்டோஸ், சோனெட், கேரன்ஸ், EV6 மற்றும் கார்னிவல் ஆகியவற்றை விற்பனை செய்கிறது
- ஐஎம்டீ வெர்ஷன்ஸ் 38 சதவீத விற்பனையைக் கொண்டுள்ளது
கியா இந்தியா மே மாதத்தின் விற்பனை மற்றும் வரவிருக்கும் லான்ச்ஸ்
கியா இந்தியா மே 2023 இல் 24,770 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு டொமெஸ்டிக் 18,766 யூனிட்டுஸாக இருந்த நிலையில், கடந்த மாதம் எக்ஸ்போர்ட்க்கு 6,004 யூனிட்ஸாக இருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செல்டோஸை கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
கியா மாடல் வாரியான மே மாதத்தின் விற்பனை
கியா சோனெட் 8,251 யூனிட்ஸ் விற்பனையை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் 4,065 யூனிட்ஸ் மற்றும் 6,367 யூனிட்ஸ் விற்பனை செய்தது. இந்த நிறுவனம் EV6 ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் காரின் 82 யூனிட்ஸையும் விற்பனை செய்துள்ளது.
மே 2023 விற்பனையில் கியா இந்தியாவின் கருத்துக்கள்
கியா இந்தியாவின் நேஷனல் ஹெட் சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் ஹர்தீப் சிங் ப்ரார் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 'மே மாதத்தில் ஒரு வாரத்திற்கு ஆலை ஆண்டு பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டதால் உற்பத்தி வரம்புகள் எங்களின் எண்ணிக்கையை பாதித்தாலும், வரும் மாதங்களில் வலுவான விற்பனை இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் சமீபத்திய டெக்னாலஜிக்கல் கண்டுபிடிப்புகளான ஐஎம்டீ ரேஞ்சிர்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இந்த மாதம், ஐஎம்டீ எங்கள் மொத்த விற்பனையில் 38 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. சோனெட் 8251 யூனிட்ஸுடன் முதலிடத்தைப் பிடித்தாலும், கேரன்ஸ் மற்றும் செல்டோஸ் எங்களின் வளர்ச்சியில் வருடம் முதல் நாள் வரை 19 சதவீதம் உயர்த்தியது.”
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்