- செல்டோஸ்க்கு நல்ல டிமாண்ட்
- கியா 100 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது
கியா இந்தியா 2.5 லட்சம் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல், இதுவரை நிறுவனம் 2,55,133 யூனிட் வாகனங்களை அதன் அனந்தபூர் தொழிற்சாலையிலிருந்து 100க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் 59% செல்டோஸ் பங்கு வகிக்கிறது, அதைத் தொடர்ந்து சோனெட் மற்றும் கேரன்ஸ் முறையே 34% மற்றும் 7% ஆகும்.
கியா இந்தியா கியா நிறுவனதிர்க்கு ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாக அறியப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது, ஆனால் இந்த ஆண்டு முதல் நிறுவனம் தனது 90% வாகனங்களை இந்தியாவில் பிரத்தியேகமாக தயாரிக்கும். மேலும், அனந்தபுரம் தொழிற்சாலையில் இருந்து, தென் ஆப்ரிக்கா, சிலி, பராகுவே, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கு கியா இந்தியா தனது வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது.
கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி மியுங்-சிக் சன் கூறுகையில், “எங்கள் நல்ல குவாலிட்டி மற்றும் புதுமையான யோசனைகள் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன, மேலும் வெளிநாடுகளில் எங்களின் மேட் இன் இந்தியா வாகனங்களின் வெற்றி எங்கள் ஈர்க்கக்கூடிய இலக்குகளை பிரதிபலிக்கிறது, கியா ஒரு பெரிய சந்தையாக மாறுகிறது. மேலும் இந்த வேகத்தை தொடர விரும்புகிறோம். மேலும், இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்வதில் எங்களின் கவனம் செலுத்தப்பட்டு, தொடர்ந்து ஏற்றுமதி செய்வோம்,'' என்றார்.
மற்ற செய்திகளில், கியா சமீபத்தில் கேரன்ஸ் எம்பீவியின் 1.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. கியா 2022 முதல் காலாண்டில் கேரன்ஸ் ஐ அறிமுகப்படுத்தியது, மேலும் நிறுவனம் இந்த ஆண்டு கேரன்ஸின் 6-சீட்டர் வேரியன்ட்டையும் அறிமுகப்படுத்தியது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்