- ரூ. 1.30 கோடிக்கு இந்தியாவில் அறிமுகமானது
- ஜிடீ-லைன் AWD வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்
கியா தனது பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யுவி EV9 ஐ இந்தியாவில் ரூ. 1.30 கோடிக்கு (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகப்படுத்தியுள்ளது. கியாவின் அனைத்து பிரீமியம் அம்சங்களையும் கொண்ட ஜிடீ-லைன் AWD மாடலில் மட்டுமே இந்த எஸ்யுவி கிடைக்கும். இந்த வாகனம் நாட்டின் 10 பெரிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். நிறுவனம் கியா EV9 டெலிவரி மார்ச் 2025 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
EV9 விற்பனைக்கான குறிப்பிட்ட எண்களை கியா வெளியிடவில்லை. இது முன்பதிவு அடிப்படையில் மட்டுமே இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும். பிரீமியம் எலக்ட்ரிக் கார் பிரிவில் கியாவின் முதல் முயற்சி இதுவாகும், இது நிறுவனத்தின் லக்சுரியை காட்டுகிறது.
கியாவின் எதிர்கால திட்டங்களில் EV9 ஒரு முக்கிய பகுதியாகும். அடுத்து, கியா 2025 இன் பிற்பகுதியில் கேரன்ஸ் இவி மற்றும் 2026 இல் மற்றொரு எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தும், இது சோனெட் இவி அல்லது புதிய காம்பேக்ட் எஸ்யுவியாக இருக்கலாம். கியாவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் நிறுவனத்தின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்