- EV9 இந்தியாவில் கியாவின் இரண்டாவது எலக்ட்ரிக் காராக இருக்கும்
- கியா இந்த ஆண்டு புதிய கார்னிவலையும் அறிமுகப்படுத்தவுள்ளது
இந்த மாத தொடக்கத்தில் அதன் தயாரிப்புகள் முழுவதும் பலவிதமான புதுப்பிப்புகளை அறிவித்த பிறகு, கியா எந்த நேரத்திலும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. இப்போது, கொரிய ஆட்டோமொபைல் பிராண்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
நடப்பு நிதியாண்டில் EV9 எலக்ட்ரிக் எஸ்யுவி மற்றும் நியூ ஜெனரேஷன் கார்னிவல் ஆகிய இரண்டு புதிய மாடல்களை கியா அறிமுகப்படுத்தும், அதே நேரத்தில் EV9 கார்னிவல் விரைவில் வெளியிடப்படும்.
கியா ஏற்கனவே இரண்டு கார்களில் சோதனையைத் தொடர்கிறது. தவிர, இரண்டு மாதங்களுக்கு முன்பு EV9 ஐ சோதிக்கத் தொடங்கியது, இது இந்திய சந்தையில் பிராண்டின் புதிய ஃபிளக்ஷிப் காராக இருக்கும், இது 2WD மற்றும் 4WD வேரியஇன்ட்ஸில் வழங்கப்படுகிறது மற்றும் இது ஒரு முழு சார்ஜில் சுமார் 400-500 கிமீ டிரைவிங் ரேஞ்ச்ஜை வழங்குகிறது.
இந்தியா-ஸ்பெக் EV9 பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது இல்லை, ஆனால் இந்த கார் சிபியு வழியாக இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம், தேவைக்கேற்ப சிகேடி வெர்ஷன் வழங்கபடும் . இது லெவல்-2 ஏடாஸ், கனெக்டெட் கார் டெக்னாலஜி, இரண்டாவது வரிசையில் மின்சாரம் சரிசெய்யக்கூடிய சீட்டுகள், பவர்ட் டெயில்கேட் மற்றும் மல்டி-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்