-561 கிமீ கொண்ட டிரைவிங் ரேஞ்சை வழங்கும்
-இது கியாவின் த்ரீ-ரோ எலக்ட்ரிக் எஸ்யுவி ஆகும்
இந்தியாவில் கியா நிறுவனம் தனது எலக்ட்ரிக் எஸ்யுவியான கியா EV9 ஜிடீ-லைன் ஐ ரூ. 1.3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
EV9 எக்ஸ்டீரியர்
கியா EV9 என்பது கார் தயாரிப்பாளரின் பிளக்ஷிப் த்ரீ-ரோ எலக்ட்ரிக் எஸ்யுவி இ-ஜிஎம்பீ (E-GMP) பிளாட்ஃபார்ம்மை அடிப்படையாகக் கொண்ட கார் ஆகும். இது ஒரு பிளாங்க்-ஆஃப் கிரில் மற்றும் இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல் உடன் வெர்டிகல் எல்இடி ஹெட்லைட்களுடன் கூடிய ஃப்ரண்ட் ஃபேஷியா கொண்டது. மேலும் இதன் டெயில் லைட்டுகளின் எல்இடி டிசைன் மாறாமல் உள்ளது மற்றும் எஸ்யூவியில் ஃப்ளஷ்-பிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஸ்கொயர்-ஆஃப் வீல் அர்செஸ் மற்றும் 20-இன்ச் அலோய் வீல்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.
EV9 இன்டீரியர்
EV9 இன் இன்டீரியரில் த்ரீ-ரோ சீட் மற்றும் டாஷ்போர்டு லேஅவுட் உள்ளது. இதில் ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட பெரிய ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, EV9 ஆனது ஏடாஸ் ஐ கொண்டுள்ளது, இதில் 27 புதிய ஆட்டோநோமஸ் டிரைவிங் அசிஸ்ட் அம்சங்கள் உள்ளன.
EV9 பேட்டரி மற்றும் டிரைவிங் ரேஞ்ச்
இந்தியாவில் EV9 ஜிடீ-லைன் 99.8kWh பேட்டரியுடன் கூடிய லாங்-ரேஞ்ச் வேரியன்ட் ஆகும், இது 561 கிமீ கொண்ட டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. இந்த மாடல் டூயல்-மோட்டார் செட்டப் உடன் வருகிறது, மேலும் இது 379bhp மற்றும் 700Nm டோர்க்கை வெளியிடுகிறது. இது 350kWh டிசி சார்ஜரைப் பயன்படுத்தி 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய வெறும் 24 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.