- 585bhp கொண்ட பவரை பெறும்
- ஃப்ரண்ட் மற்றும் ரியரின் லூக் டிசைன் புதியதாக இருக்கும்
கியா EV6 கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் உள்ளது. இப்போது நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. EV6 இன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது, ஆனால் இப்போது இது 2024 இன் பிற்பகுதியில் அல்லது 2025 இன் தொடக்கத்தில் டீலர்ஷிப்களில் வரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EV6 ஆனது கியாவின் எலக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்மில் (E-GMP) கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது 800V ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் விருப்பத்தையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், அதன் பேட்டரி பேக்கைப் பற்றி பேசினால், இது 84kWh இன் பெரிய அளவிலான பேட்டரி பேக் யூனிட்டைப் பெறும், இது முந்தைய மாடலை விட சுமார் 6.6kWh அதிகம். இந்த பேட்டரி பேக் 350kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இதன் மூலம் 10 முதல் 80 சதவீதம் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
இது தவிர, இந்த ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கும் ஜிடீ வேரியன்ட்டில் இரண்டு மோட்டார்கள் வழங்கப்படும், இது 585bhp பவரை உருவாக்கும். கியா தனது புதிய மாடலின் ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்களின் வடிவமைப்பை மாற்றியுள்ளது, மேலும் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் உள்ள லைட்ஸ் யூனிட்டின் கிராபிக்ஸும் மாற்றியமைக்கப்படும். இது தவிர, இது புதிய வீல்ஸ் மற்றும் வண்ண விருப்பங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியருடன் வழங்கப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்