- இது EV6, EV9, EV5 மற்றும் EV4 வரிசையில் இருக்கும்
- 2025க்குள் இந்த எலக்ட்ரிக் கார் லான்ச் செய்யப்படலாம்
என்ன எலக்ட்ரிக் அவதாரத்தில் கியா செல்டோஸ் ஆ? ஆம், நீங்கள் படித்தது சரிதான். சமீபத்திய 2023 இவி தினதன்று, கியா அதன் EV3 கான்செப்ட்டை வெளியிட்டது, இது செல்டோஸ் எஸ்யுவிக்கான அடிப்படையான எலக்ட்ரிக் கார் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். 2025 ஆம் ஆண்டு முதல் நிதியாண்டுக்குள் அதன் அனதாபூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இவி பற்றி கியா ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது, மேலும் செல்டோஸ் அந்த EV3 வாகனத்திற்கான அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எக்ஸ்டீரியரில் செல்டோஸ் போலவே இருக்குமா?
வெளிப்புறத்தில் வெர்டிகல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், சங்கி வீல்ஸ் ஆகியவை அடங்கும். கியாவின் தற்போதைய கார்ஸைப் போலவே பின்புறமும் இணைக்கப்பட்ட லைட் பார் மற்றும் லிப் ஸ்பாய்லருக்குக் கீழே ரேக் செய்யப்பட்ட கண்ணாடியைக் கொண்டுள்ளது. நீங்கள் தற்போதைய செல்டோஸ் மற்றும் இந்த காரை பார்த்தால், நீங்கள் எஸ்யுவிஸின் பரிணாம வழற்சியை பார்ப்பது மிகவும் எளிதானது.
கேபின் விவரங்கள்
டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேஸ், டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஃப்ளோட்டிங்ஆர்ம்ரெஸ்டின் கீழே ஒரு பெரிய ஸ்டோரேஜை பெறுவீர்கள். பெய்ஜ் கலந்த க்ரீன் இதமான நிறத்தை கொண்டிருக்கும். இரண்டாவது வரிசையில் ஃப்ளோட்டிங்ஆர்ம்ரெஸ்ட் மற்றும் இரண்டு பேருக்கு இடையே இடம் ஆகியவற்றைக் இது காட்டுகின்றன.
இன்ஜின் விவரங்கள்
இதன் இன்ஜின் மற்றும் டைமமென்ஷன்ஸின் விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை, ஆனால் இது தற்போதைய செல்டோஸைப் போலவே அளவிடும் மற்றும் சுமார் 300-400 கி.மீ டபிள்யூஎல்டீபீ ரேஞ்சை வழங்கும் பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இது V2L, V2V மற்றும் 175kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டதும், எலக்ட்ரிக் செல்டோஸ் ஹூண்டாய் , டாடா , மஹிந்திரா, டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி போன்றவற்றின் இவி’ஸை எதிர்கொள்ளும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்