- இது சோனெட்க்கு கீழே உள்ள மாடல் ஆகும்
- இது பஞ்ச் மற்றும் எக்ஸ்டர் உடன் போட்டியிடும்
கியா பி-எஸ்யுவி க்ளாவிஸ்ஸை சோதனையை செய்ய தொடங்கியுள்ளது. இது சமீபத்தில் சர்வதேச சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. கியா சமீபத்தில் க்ளாவிஸ் பெயரை இந்தியாவில் ரெஜிஸ்டர் செய்தது.
படங்களின்படி, கியா க்ளாவிஸின் இந்த டெஸ்ட்டிங் மாடல் முற்றிலும் மூடப்பட்டிருந்தன, இதன் காரணமாக அதன் டிசைனைப் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ப்ரொடக்ஷன்க்கு ரெடியாக இருக்கும் இந்த காரில் தூலா-டோன் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் அலோய் வீல்ஸ் இருக்கும் என்பதை ஸ்பை படங்கள் வெளிப்படுத்துகின்றன. ஃப்ரண்ட் டோரில் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம்கள், பாடி கலர் ஏ மற்றும் பி-பில்லர், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் குவார்ட்டர் கிலாஸ் மற்றும் ஒட்டுமொத்த ஸ்டன்ஸ் நேராக உள்ளது.
முந்தைய ஸ்பை படங்களின்படி, க்ளாவிஸ் பி-எஸ்யுவியில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், டூ-டோன் இன்டீரியர் தீம், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களுடன் வரும்.
கியா க்ளாவிஸின் இன்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த இந்திய மாடல் 1.2 லிட்டர், ஃபோர் சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டி யூனிட்டுடன் வரலாம். அறிமுகத்திற்குப் பிறகு, க்ளாவிஸ் டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்