- இதில் பனோரமிக் சன்ரூஃப் உடன் வரலாம்
- இது டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர்க்கு போட்டியாக இருக்கும்
கியா தனது க்ளாவிஸ் பி-எஸ்யுவியை இந்த ஆண்டு அறிமுகம் செய்வதற்கு முன் தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது. இதன் டெஸ்ட் மாடலின் புதிய ஸ்பை படங்களில் அதன் சில அம்சங்கள் காணப்பட்டது
படங்களில் காணப்படுவது போல், புதிய க்ளாவிஸ் ஒரு பாக்ஸி டிசைன், இன்டெக்ரேட்டட் எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய வெர்டிகல் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஃப்ளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், 17-இன்ச் டூயல்-டோன் அலோய் வீல்ஸ், வெர்டிகல் எல்இடி டெயில்லைட்ஸ், ரியரில் பம்பர் உடன் நம்பர் ப்ளேட் மற்றும் ரூஃப் ரெயில் சேர்க்கப்பட்டுள்ளன.
2024 க்ளாவிஸின் இன்டீரியரில் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களுடன் வரலாம். கூடுதலாக, இது இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் கனெக்டிவிட்டி, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஏடாஸ் அம்சங்களைப் பெறலாம்.
இந்தியாவுக்கு தயாரிக்கபடும் கியா க்ளாவிஸில் 1.2 லிட்டர், ஃபோர் சிலிண்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின் மூலம் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்களுடன் இணைக்கப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் டாடா பஞ்ச் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்