- அப்டேடட் கியா கார்னிவல் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
- ப்ரீ ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2023 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது
கியா கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் வரவிருக்கும் வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கு முன்னதாக, இது காணப்பட்டது. இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ப்ரீமியம் எம்பீவியின் ப்ரீ ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை கார் தயாரிப்பாளர் காட்சிப்படுத்தியிருந்தார்
படங்களைப் பார்த்தால், புதிய கியா கார்னிவல் முன்பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தைப் பெறுகிறது, இதில் குரோம் இன்சர்ட்ஸுடன் கூடிய புதிய கிரில், செல்டோஸ் போன்ற எல்இடி டிஆர்எல், நீளமான ஹெட்லேம்ப்ஸ், புதிய டூயல்-டோன் அலோய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பின்புறத்தில் எல்இடி லைட் பார் ஆகியவை அடங்கும். அதன் டெயில்லைட்ஸின் தோற்றமும் சோனெட்டைப் போலவே உள்ளது, அதே சமயம் அதன் ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸில் மிகக் குறைவான கர்வ்ஸ் மற்றும் லைன்ஸ் உள்ளன. கூடுதலாக, குரோம் இன்சர்ட்ஸ் எல்லா இடங்களிலும் வழங்கப்படும்
2024 கியா கார்னிவலின் இன்டீரியரில் புதிய டாஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சிங்கிள் பீஸ் ஸ்கிரீன் மற்றும் பின்புற என்டர்டைன்மெண்ட் ஸ்கிரீன் ஆகியவற்றைப் பெற்றுள்ளன.
வரவிருக்கும் கியா கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் 2.2 லிட்டர் ஃபோர் சிலிண்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 200bhp மற்றும் 400Nm டோர்க்கை உருவாக்கும். இதில் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்