- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸில் வழங்கபடும்
- ஆட்டோமேட்டிக் வேரியண்ட்ஸில் மட்டுமே கிடைக்கும்
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸுடன் புதிய X-லைன் வேரியண்ட்டை கேரன்ஸ் எம்பீவியை அறிமுகப்படுத்தியது. இந்த எம்பீவியின் வேரியண்ட் பட்டியலை கியா இந்தியா புதுப்பித்துள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ. 18.94 லட்சம் மற்றும் டீசல் வேரியண்ட்டின் ரூ. 19.45 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்). இந்த புதிய வேரியண்ட் ஆறு சீட்டர் விருப்பத்துடன் மட்டுமே கிடைக்கும் டாப்-ஸ்பெக் ட்ரிம் ஆகும்.
கியா கேரன்ஸ் X-லைன் செவன்-ஸ்பீட் டிசிடீ உடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்ஸுடன், சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்டில் பெறலாம். எக்ஸ்டீரியரில், இந்த புதிய எடிஷனில் ஒரு புதிய மேட் கிராஃபைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். மற்ற வெளிப்புற சிறப்பம்சங்களில் க்ளோஸ் பிளாக் பெற்ற ரேடியேட்டர் கிரில், ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்ஸ், ஓஆர்விஎம்’ஸ், ஸ்கிட் பிளேட் மற்றும் சைட் டோர் கார்னிஷ் போன்ற வெளிப்புற சிறப்பம்சங்களை பெறுகின்றன. இதற்கிடையில், இதில் டூயல்-டோன் 16-இன்ச் க்ரிஸ்டல்-கட் அலோய் வீல்ஸுடன் கிடைக்கின்றன.
கேபினில் இரண்டு இன்டீரியர் தீம் விருப்பங்களைப் பெறுகிறது - ஸ்ப்ளெண்டிட் சேஜ் க்ரீன் மற்றும் டூ-டோன் பிளாக். மேலும், இது ரியர் சீட் ரியர் பயணிகள்க்கு இன்டர்டைன்மெண்ட் சீட் உடன் கிடைக்கின்றன. இந்த இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும் மற்றும் ஸ்கிரீன் மிரரிங்க், பாட்காஸ்ட் மற்றும் பிற என்டர்டைன்மெண்ட் ஆப்ஸ் போன்ற அம்சங்கள் பெறுகின்றன.
கேரன்ஸ் X-லைன் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. முந்தையது செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 158bhp மற்றும் 253Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், டீசல் வேரியண்ட்டில் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் உடன் 113bhp மற்றும் 250Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்